Showing posts with label இருட்டுக்கடை ஒரிஜினலும் டுப்ளிக்கேட்டும். Show all posts
Showing posts with label இருட்டுக்கடை ஒரிஜினலும் டுப்ளிக்கேட்டும். Show all posts

Thursday, October 21, 2010

இருட்டுக்கடை......ஒரிஜினலும் டுப்ளிக்கேட்டும்

நெல்லைக்கே புகழ் சேர்ப்பது அல்வாதான்! அதுவும் ”இருட்டுக்கடை அல்வா” இன்னமும் ஸ்பெஷல். மாலை ஆறுமணிக்கு போட்டு ஒரு மணி நேரத்தில் தீர்ந்துவிடுவதுதான் அதன் சிறப்பு.


பாக்கெட்டாக வாங்க மாட்டார்கள். அப்போதே அங்கேயே சுடச்சுட வாழையிலையில் ஐம்பது, நூறு கிராம் என்று தருவார்கள். அப்படியேச் சாப்பிடலாம்!! ருசியோ ருசி!! தொண்டையில் வழுக்கிக் கொண்டு இறங்கும். பார்சல் வேண்டுமென்றாலும் அதே வாழையிலையில் சுத்தி அதை துண்டு பேப்பரில் மடக்கித் தருவார்கள். இப்போது ஆயில் பேப்பரில் தருகிறார்கள். பெயர் பிரிண்ட் அடித்த கவர்கள் எல்லாம் கிடையாது.

எவ்வளவு அப்பிராணியாக இருந்திருக்கிறார்கள்!!!


மேலே வெள்ளையடித்துக்கொண்டிருப்பதுதான் இருட்டுக்கடை. கடைக்குப் பெயர் பலகை கிடையாது. ‘இருட்டுக்கடை’ என்ற பேரை காப்பி ரைட் வாங்கி பதிவும் செய்து கொள்ளவில்லை.



சும்மா விடுவார்களா? ”திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா” என்று பேர் போட்டுக் கொண்டு கனஜோராக வியாபாரம் நடக்கிறது, நெல்லை ஜங்ஷனில்.



விஜாரித்ததில் ஒண்ணும் செய்ய முடியாதாம். கோர்ட்டுக்குப் போனாலும் நிக்காதாம்.

கோர்ட்டில் நிக்காட்டால் என்ன? மக்களுக்குத்தெரியும் எது அசல் எது நகல் என்று. ஒரிஜினலின் ருசி மக்கள் மனதில் என்றும் “நிக்கும்!”

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...