நாடங்கும் தீப ஒளி ஏற்றி தெய்வங்களை வழிபடும் நல் மாதமாம் கார்த்திகை மாதத்தில் அறிவிக்கப் பட்டிருக்கும் போட்டி.....மிகவும் பொருத்தமானது.
அதிலும் கார்த்திகை மாதப் பிறப்பன்று வெளிவரும் போட்டிக்கான என் படங்களை தெரிவு செய்ய இன்றே பதிவிடுகிறேன்.
வளைந்த கூரையில் காட்டப்படும் ஒளிக்காட்சி.....

நள்ளிரவில் செவ்வொளியில்...

மகாராணியின் கழுத்துநகை தீபாவளியன்று பளபளக்கும் மினுமினுக்கும் ஜொலிஜொலிக்கும் வைர அட்டிகை.

மேற்கூரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னும் விளக்கொளி.

பெங்களூருவில் தொங்கும் விளக்கு.

விளக்குகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்போ...? படிப்படியாய் ஒளிரும் ஒளி.

எங்க வீட்டு பிள்ளையார் விளக்கொளியில்.

பிரம்மாண்டமாய் தொங்குகிறது......அமெரிக்க ஷாண்ட்லியர்.

தொங்கும் மணி வழியே...ஒளி.
தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் 'ஒளி' மயமான எதிர்காலம் ஒளிர வாழ்த்துகிறேன்.