Showing posts with label செஸ். Show all posts
Showing posts with label செஸ். Show all posts

Tuesday, April 8, 2008

சதுரங்கம் வெளியரங்கில்

சன்னிவேலில் ஒரு நாள் சாப்பிங் மால் ஒன்றில் கால் ஓயுமட்டும் சுற்றிவிட்டு அருகில் ஒரு ரெஸ்டொரண்ட்க்கு சாப்பிடச் சென்றோம். நம்ம ஊரில் உள்ளே இடமில்லையென்றால் அங்கேயே
காத்திருக்க வேண்டும். ஆனால் அங்கு நம் கையில் பாட்டரியில் இயங்கும் டிஸ்க் ஒன்றைக் கையில் கொடுத்து பக்கத்து கடைகளில் சுற்றிக்கொண்டிருங்கள் மேஜை தயாரானதும் தகவல் வரும் அப்போது வாருங்கள் என்று பணிவோடு வேண்டிக்கொள்கிறார்கள்.

சரியென்று வெளியே வந்தோம். வாவ்!!!என்ன அருமையான இடம். இரு பக்கங்களிலும் கடைகள் வரிசையிட்டிருக்க, நடுவில் பார்க் போன்ற இடத்தின் இரண்டு ஓரங்களிலும் மேஜை நாற்காலிகள் போடப்பட்டு மேஜைகளின் மேல் செஸ்போர்டும்
காய்களும் தயாராக இருந்தன.விரும்பினால் அதில் இருவரிருவராக அமர்ந்து விளையாடலாம்.
மேஜை நாற்காலிகளுக்கு நடுவே நாமே காய்களாக நின்று விளையாடுமளவுக்கு பெரிய பெரிய செஸ் போர்டுகளும் இரண்டடி உயரமான காய்களும் வா..வா..என்றழைத்தன.



எங்களை அழைத்துச்சென்றிருந்த குட்டித்தம்பியும் அவன் பிள்ளைகளும் சுவாரஸ்யமாக விளையாட
களமிறங்கினர். பெரியவன் கார்த்தி ஒரு புறமும் சின்னவன் சாகேத்தும் அப்பாவும் எதிர்புறமுமாக விளையாடவாரம்பித்தனர். சாகேத் கிராமத்து திருவிழா பார்க்கப்போகும் சிறுவன் போல் அப்பாவின் தோள் மீது ஏறிக்கொண்டான். அங்கு வெகு சகஜமான காட்சியிது. காய்களை நகர்த்தி விளையாடியது போய் தூக்கிக் கொண்டு போய் அடுத்த கட்டத்தில் வைப்பது வேடிக்கையாயிருந்தது.


ஆட்டையின் சுவாரஸ்யத்தின் நடுவே...திடீரென்று டிஸ்க் அதிர ஆரம்பித்தது. ஓஹோ!! இதுதான் டிஸ்க்தரும் சிக்னலா? என்ன அருமையான ஏற்பாடு? இல்ல? காத்திருக்க்கும் நேரத்தை
வீணாக்காமல் வேடிக்கையாக செலவளித்தது நன்றாக இருந்தது.


ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...