கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கும் நாந்-ஸ்டாப் கொண்டாட்டம். ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில்.
காலையில் டிவியில் பாத்துட்டு, மதியம் போனேன்.
அப்ப்பா...அப்பப்பா...! வீட்டில் பண்டம் பலகாரம் செய்ய திண்டாடும் கூட்டம்.
அங்கு தங்கள் வீட்டு சமையலறையை பூட்டீட்டு குழுமியிருந்தார்கள்.
வாசலில் வரவேற்கும் லாரலோ? ஹார்டியோ?
ஐந்தாம் தேதி காலை எட்டு மணி வரைதான் என்பதால், இன்றே போனேன். எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்க.
பொருளை வாங்கிவிட்டு பணம் செலுத்துமிடம்.
அழகழகான திருவுருவங்கள் பொறித்த சின்ன சின்ன டப்பாக்களில் ஒத்தை ஒத்தை மைசூர்பாகு!! தீவாளி பரிசாகக் கொடுக்க. சாய்பாபா, கிருஷ்ணர், முருகன், சிருங்கேரி சுவாமிகள் படங்கள்.
நல்லாருக்கில்ல?
நானும் அதில் ஆறு டப்பாக்கள் வாங்கிக்கொண்டேன். யாருக்கெல்லாம் என்பதை பிறகு
தீர்மானித்துக் கொள்ளலாம். (துள்சி ! எனக்கொண்ணுன்னு ஓடி வாங்க!)
இனிப்ப வகைகள் கார வகைகள் வாங்க காரசாரமாய் கூடியிருக்கும் கூட்டம்.
ஆண்கள் பெரும்பாலும் பரிசாகக் கொடுக்கவே வாங்குகிறார்கள். பெண்கள்? தாங்கள் வீட்டில் செய்ய முடியாததை வாங்கிக் கொள்கிறார்கள்.
பிஸியான
சிந்திக்கிறது.
ஃபுல் மீல்ஸ்!! வேண்டுமானால் ஒரு கட்டுக் கட்டலாம்.
அல்லது விதவிதமான சிற்றுண்டிகள். காட்சிக்கு...அல்லது மெனு கார்ட் மாதிரி பரப்பி வைத்திருக்கிறார்கள். "என்ன வேணும் கேளுங்கடா...இஷ்டம் போல வெட்டுங்கடா....!!" என்று வெட்டும் கூட்டம்.
செங்கரும்பு சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிச்ன்றன. தனியாக ஐஸ் க்யூப் சேர்க்க வேண்டாமில்லையா? இதுவும் நல்ல ஐடியா!!!
மிஷினில் அ..ப்படிக் கொடுத்து இ..ப்படி ஜூஸாக ஜாரில் பிடிக்கிறார்.
கடைசியில் நான் எனக்காக வாங்கிக் கொண்டது. "தண்ணீர் பூரி, உப்பு, மிளகு போட்ட கரும்புச்சாறு!!
தீவாளி வாழ்த்துக்கள்!!!
அளவோடு உண்டு, அளவோடு வெடித்து அழக்காக கொண்டாடுங்கள் தீவாளியை!!!!!!
தீவாளி வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!
கண் கொள்ளாமல் இனிப்பு கார வகைகளை கண்களால் விழுங்கி, வரும் வழியில் டப்பா செட்டிக் கடையில் தீவாளி லேகியம் வாங்கப் போய் பயங்கர ட்ராப்பிக்கில் சிக்கி வாங்க முடியாமல் அதையும் கண்களால் விழுங்கி, திருப்தியாக வீடு வந்து சேர்ந்தேன்.