Showing posts with label தசரா ஆரம்பம். Show all posts
Showing posts with label தசரா ஆரம்பம். Show all posts

Friday, October 15, 2010

தசரா ஆரம்பம்..பம்..பம்..பம்..பேரின்பம்

சென்ற ஏழாம் தேதி அதிகாலை 3-30 இருக்கும். சப்பரம் வந்துவிட்டது, எந்திரி..எந்திரி..என்ற மதினியின் குரல் எழுப்பியது. கண் விழித்தேன். தூரத்தில், ‘ரண்ட ரகுண..ரண்டக ரகுண’ என்ற தவிலோசை கேட்டது. இரவு படுக்கும் முன் நாலு சப்பரங்கள் வரும் என்று நான்கு தட்டுகளில் அர்ச்சனை சாமான்கள் தயாராக வாசல் திண்ணையில் இருந்தன.
அரைகுறை தூக்கத்தில் விழித்து வாசல் பக்கம் ஏகினோம்.
தூஊஊரத்தில் அதாவது தெருக்கோடியில் சப்பரம் வருவது தெரிந்தது.



இதோ அருகில் எங்கள் வீட்டு வாசலில் அம்மன் வீதி உலா வந்து நிற்கிறாள்! கற்பூர ஆரத்தியோடு தரிசனம்!

அடுத்த சப்பரத்தில் தகதக வென தரிசனம் தருகிறாள்.

இரவு முழுவதும் தூங்காமல் சப்பரத்தின் பின்னால் அமர்ந்து தசராவை கொண்டாடும் சிறுவர்கள். எவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள்!!!



சிந்துபூந்துறை செல்வியம்மன் பூவாய் சொரிந்து ஆடி அசைந்து வருகிறாள்.



சப்பரங்களை படமெடுத்துக்கொண்டிருக்கும் போது தவில்காரவுக எனக்கு நேரே வந்து நின்று சிரித்துக்கொண்டே,’என்னையும் படமெடுங்கள்’ என்பதுபோல், ‘டண்டனக்குடி..டண்டகுனக்கடி’ என்று இரவு முழுதும் தவிலடித்த களைப்பே இல்லாமல் அடித்தார். உடனே நம்ம நாதஸ்ஸும் வந்து சேர்ந்து கொண்டார். அவர்கள் ஆசைக்கு ஒரு கிளிக்!
படம் பிரிண்ட் வருமா? என்றதுக்கு, பிரிண்ட்டெல்லாம் வராது, ஆனால் ’உலகமெல்லாம் பார்ப்பார்கள்’ என்று படத்தை ரிவைண்ட் செய்து காட்டினேன். திருப்தியாக நகர்ந்தார்கள்.






நம்ம கணினி செய்த தொல்லையால் தாமதமான பதிவுக்கு பொறுக்கவும்.
அதென்னங்க...பதிவு டைப் செய்து பின் ‘சேவ்’ செய்தால் மாட்டேங்குது? ஆட்டோ சேவ் ஃபெயிலியர்-ங்குறது. ஏன் இப்படி அடிக்கடி தொல்லை செய்கிறது.

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...