Showing posts with label கரு சுமந்த கண்மணிகளுக்கு.....பாகம் மூன்று. Show all posts
Showing posts with label கரு சுமந்த கண்மணிகளுக்கு.....பாகம் மூன்று. Show all posts

Sunday, September 19, 2010

கரு சுமந்த கண்மணிகளுக்கு....பாகம் மூன்று

ஆச்சு, பிரசவகாலம் நெருங்கும். சிலருக்கு டாக்டர் சொல்லிய தேதியிலேயே வலி வந்து விடும். சிலருக்கு குறித்த நாள் தாண்டிவிடும். சிலருக்கு வலி வர

ஊஃபி....மன்னிக்க இது பேரன் மழலை, ஊசி போட்டுத்தான் வரவழைப்பார்கள்.



எப்படியோ வலி ஆரம்பித்து டாக்டர் உதவியால் சுகப்பிரசவம் ஆகும்.

நம்ம ஊரில் அம்மாக்களின் கைப்பக்குவம் செய்ய மருத்துவர் எந்த தடையும் சொல்லமாட்டார். சொன்னாலும் திருட்டுத்தனமாக அந்த பக்குவங்களும் ஒரு பக்கம் நடக்கும்.



இண்டர்நெட்டில் பாத்து சகலமும் புரிந்து கொள்ளும் அமெரிக்காவிலோ என்ன செய்வது என்று யோசித்தேன். மறைவாக செய்யவும் விருப்பம் இல்லை.



நல்ல வேளையாக மகளுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஒரு வட இந்தியப் பெண். என்னைப் பார்த்து(மூஞ்சியிலேயே எழுதி ஒட்டியிருந்ததோ என்னவோ) உங்கள் முறைப்படி மருந்துகள் கொடுக்கலாம் என்றாள். அப்பாட என்றிருந்தது.



பிரசவம் முடிந்ததும் வெற்றிலையில் ஒரு அரிசி எடை கஸ்தூரியை வைத்து மடித்து நன்றாக மென்று தின்னக் கொடுக்கவேண்டும்.



பிறகு அரை டம்ளர் நீர் குடிக்க வேண்டும்.



அடுத்து சொரசம் பண்ணிய தேன் 100 கிராம் கொடுக்கணும்.



அதென்ன “சொரசம்?”

வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது காய்ந்ததும் அடுப்பை அணைத்து விட்டு உடனே அதில் தேனை ஊற்றினால், ‘சொர்ர்ர்’ என்று சத்தம் கேட்கும். அதுதான் சொரசம் பண்ணிய தேன். திக்காக இருக்கும் தேன் அதன் பின் சிறிது இளகி லூசாக ஆகிவிடும். இதை வீட்டிலேயே தயார் செய்து ஒரு பாட்டிலில் ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.



தண்ணீர், தேன் எல்லாம் சரி. கஸ்தூரி அதுவும் வெற்றிலையில் வைத்து கொடுப்பது எதற்காக. கஸ்தூரி என்பது மானின் உடம்பிலிருந்து கிடைக்கும் ஒரு வஸ்து.



அக்காலத்தில் உட்ம்புக்கு நல்லது என்றதும் ஏன், எதற்கு என்ற கேள்வி கேட்காமல் அதை வாங்கி மடக் என்று வாயில் போட்டுக் கொள்வோம் .

இப்போது பதிவு எழுத அதன் காரணம் சொன்னால் நல்லருக்குமே என்று

எங்க சாந்தா மதினியிடம் போன் செய்து விபரம் கேட்டால்............”யம்மா! நானும் உன்னைப் போல்தான் என்னன்னு கேக்காமலே சாப்பிட்டவள், அம்மாவிடமோ பெரியம்மாவிடமோ கேட்காமல் போய்விட்டேனே!” என்று புலம்பினார்கள்.



சேரி...! பிரசவம் முடிந்து உடனே கஸ்தூரி ஏன் சாப்பிட வேண்டும்?

இந்தக் கேள்விக்கு தெரிந்தவர்கள் யாரேனும் பதில் சொல்லுங்களேன்.



தொடரும்

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...