என்ன சுவாரஸ்யமான அனுபவம்!!!
காரை அங்குள்ள ட்ராக்கில் கொண்டு நிறுத்தினாள். அத்தோடு சரி! மீதி வேலைகளை இயந்திரங்களே பார்த்துக்கொண்டன.இரண்டு காமிராக்களிலும் அள்ளிக்கொண்டேன்.
ட்ராக்கில் கார் மெதுவாக நகர்ந்து மையத்தில் வந்து நின்றது. நாலாபக்கமிருந்தும் தண்ணீர் பாய்ந்தடித்தது.
நீர் காண்ணாடியில் வழிந்தோடியது.பிறகு சோப்பு நீர் வழிய காரின் ஐந்து பக்கங்களிலும் ப்ரெஷ்கள் சுகமாக வண்டியை தேய்த்துக்கொடுத்தன.
பின்னர் சோப்புநீர் மறுபடி பீச்சியடிக்கும் நீரால் வழிந்தோடியது.
அடுத்து ட்ரையர் நீரையெல்லாம் உறிஞ்சியெடுத்தது
அப்பால தலை துவட்டுமிடத்துக்கு கார் வந்தது.இந்த இடத்தில் வண்டி மிக மெதுவாக நகர்ந்த்து.
ரோலர் மாட்டிய டவல் கொண்டு மேலும் கீழும் உருட்டி நன்றாக துவட்டியது.பளபள வென்று
புத்தம் புதியதுபோல் பென்ஸ் கார் வெளியே வந்தது. என்ன...சாம்பிராணி புகை போடாத குறைத்தான்!!
கார் குளிக்கும் போது நாங்கள் உள்ளிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.அதுவும் வெட்கப்படவில்லை,நாங்களும் ஜாலியாக பேசிக்கொண்டும் படமெடுத்துக் கொண்டுமிருந்தோம்.
வித்தியாசமான அனுபவம்!!