மரம் வளர்த்து அதைப் பாதுகாப்பது என்பது இப்படித்தான். பார்த்ததும் இந்த அக்கரை ஈங்கில்லையே என்று மனம் சங்கடப்பட்டது.
மரத்தைச் சுற்றி சுமார் இரண்டடி விட்டத்துக்கு வேர்கள் பரவ சுவாசிக்க இடம் விட்டு அதையும் இரும்பு சல்லடை கொண்டு மூடி மழை நீரோ விடும் நீரோ தாரளமாக உள்ளிறங்க வழி விட்டு
அருமையாக பாதுகாக்கும் மனம், இங்கேயா?......அட!போங்கய்யா! அடிமரத்துக்கு காலடி அளவு இடம் விட்டு மரத்தின் கழுத்தை நெருக்கி சுவாசிக்கவும் உண்ணவும் திக்கி திணறி வளரும்
நம் மரங்கள் என்ன பாவம் செய்தனவோ?
இது சிகாகோ நகரில் பிடித்தது. அந்நகர மேயர் ஒரு பெண். அவருக்கு தான் அழகாயிருப்பதைவிட தன் நகரம் அழகாயிருக்கவேண்டுமென்பதில் மிகுந்த அக்கரை காட்டுவாராம். அது அந்த நகரில் ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது. ஏன்...விமானநிலையதிலும் கூட அவர் படம் போட்டு அங்கு வரும் பயணிகளை 'அன்போடு வரவேற்கும்' பானர்களை பார்க்கமுடிந்தது. இங்கோ ஒரு முனிசிபல் கவுன்சிலருக்குக்கூட கட்டவுட்,வாழைமரம்,தோரணம்,கொடி என்று ஊரையே நாறடித்துவிடுவார்கள். கேட்பாரில்லை.
மரம் வளர்ப்ப்து மட்டுமல்ல அதை முறையாக பாதுகாக்கவும் செய்வோம்.