சென்ற 8-ஆம் தேதி பங்குனி உத்திரம் அன்று எங்கள் சொந்த ஊரான ஆத்தூரில் உள்ள குலதெய்வம் சாஸ்தா கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு, அங்கிருந்து மதுரை வந்து நாத்தனார் அவளது ரங்கமணி மற்றும் நாங்களிருவர் வாடகை வண்டி எடுத்துக்கொண்டு
ஒன்பது நவகிரக ஸ்தலங்களுக்கு(நவ என்றாலே ஒன்பதுதானே!) யாத்திரை கிளம்பினோம்.
தெய்வ அனுகிரகம் இருந்தால் அந்தந்த கோவிலுக்குச் செல்லமுடியும் என்ற என் நம்பிக்கை நிஜமானது. மேப் வாங்கி ரெண்டு ரங்கமணிகளும் சுலமாக செல்ல ரூட் போட்டுக் கொண்டார்கள்.
ஒன்லி நவகிரக கோயில்கள், வேறு எங்கும் டேக் டைவர்ஷன் கேக்கக் கூடாது என்று கண்டிஷன் வேறு. எனக்கு இத்தலங்களுக்குப் போகவேண்டுமென்று வெகு நாளாக ஆசை. ஆகவே "ஓகே!" என்றேன்.
மதுரையிலிருந்து முதலில் சென்றது பிள்ளையார்பட்டி. என்ன நீங்களே டைவர்ஷன் எடுக்கிறீர்களே? என்றதுக்கு,
ஆனைமுகனை வணங்கி விட்டுச் சென்றால் நல்லதுதானே என்றார்கள். அதானே!!!!
அங்கிருந்து தஞ்சாவூர் வழியாகப் போகும் போது...என்னோட
"முந்திரி நீ பிந்திரி" பதிவில் வந்த அதே இடம் வந்தது. அதேபோல் முந்திரியை வறுத்து தோல் நீக்கி பாக்கெட் போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். அயல்நாட்டவரும் (அவர்கள் பாக்காத முந்திரியா?) அதை படமெடுத்துக் கொண்டும் விலைக்கு வாங்கிக்கொண்டுமிருந்தார்கள்.நானும் ஒரு கிலோ வாங்கிக்கொண்டு அதோடு பொடிப்பொடியாக உடைந்த முந்திரியும் வாங்கிகொண்டேன். அன்று படமெடுக்காத குறை தீர படமும் எடுத்துக் கொண்டேன்.

அடுத்து தஞ்சாவூரில் காலை உணவு. அந்த ஹோட்டல் வாசலில் நான் பார்த்த தஞ்சாவூர் ஓவியம்! திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பது போல் தஞ்சாவூரிலேயே பிடித்த ஆளுயர தஞ்சாவூர் ஓவியம்!!

சந்திரனுக்கான கோவில் 'திங்களூர்' இங்கு கோவில் கொண்டிருக்கும் பிறையணி அம்மனின் மீது கார்த்திகைமாத பௌர்ணமி அன்று சந்திரனின் ஒளி அம்மன் மீது படுமாம்.

எங்கு பார்த்தாலும் தாமரைக் குளமாக இருக்கும் அப்பகுதியில் உள்ள தடாகத்தில் பூத்த தாமரைகளையே அர்ச்சனைக்கு மலராக வைத்திருந்தார்கள்.

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்!!கும்மி கொட்டத் தயாராய் அடுக்கியிருக்கும் தாமரை மொட்டுக்கள்!!!!

அடுத்து சென்றது குருஸ்தலமாகிய ஆலங்குடி. மழையாயிருந்ததால் படமெடுக்க இயலவில்லை. சூரியனார்க்கு உரிய தலம், சூரியனார்கோவில்!

சூரியனுக்கான கோவிலின் கோபுர வாசல்

அதே கோபுரவாசல்! சூரியனார் கோவிலில்தான் மற்ற எட்டு கிரகங்களுக்கும் தனித்தனியாக சன்னதிகள் இருக்கின்றன. ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் சன்னதிகள் இருப்பது..ஒரே இடத்தில் அத்தனை பேரையும் தரிசித்து விடலாம்தானே?

இங்குள்ள குளத்தில் நீந்தும் பெரியபெரிய மீன்களுக்கு காசு கொடுத்து பொரி பாக்கெட் வாங்கி தூவி அவைகள் தாவி வந்து கொத்தித் தின்றது. மீன்கள் உள்ள குளத்தில் கால்களை வைத்தால் அவைகள் நம் பாதங்களை கொத்திகொத்தி சுத்தப் படுத்தும் என்று அறிந்திருந்தேன். நாத்தனாருக்குப் பயம். நான் கீழ் படியில் அமந்து கொண்டு ரெண்டு கால்களையும் நீருக்குள் வைத்ததுதான் தாமதம்..........!
என்ன ஆச்சு? மீன்கள் எல்லாம் அலறி அடித்து ஓடிவிட்டன. ஏற்கனவே சுத்தமாய்த்தானே இருக்கு இதில் நாமென்னத்த சுத்தம் செய்வது என்று எண்ணிற்றோ என்னவோ?

திருநாகேஸ்வரம்!!!நாக தோஷமுள்ளவர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய தலம்.

29/01/09 அன்று நிகழ்ந்த ஓர் அதிசயத்தைப் படமெடுத்து வைத்திருக்கிறார்கள். பெரிது பண்ணி பார்த்தால் விபரம் புரியும்.


அன்றைய கோட்டா ஆறு கோவில்கள். கடைசியாக சென்றது கஞ்சனூர், சுக்கிரனுக்கானது. மற்றது வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாயுடையது. பக்கத்தில்பக்கத்தில் நிறைய கோவில்கள் இருந்தாலும் ஒரே மனசாக ஒன்பது கோவில்களில் ஆறு கோவில்களை முதல் நாள் முடித்துவிட்டு இரவு தங்குவதற்கு சென்ற இடம் திருக்கடையூர்!!!!!!!!ஆஹா! அபிராமி அழைக்கிறாளா...?அபிராமி...அபிராமி...!!
மீதி முன்று கோவில் தரிசனம் அடுத்தபதிவில். சேரியா?