இளம் பாவை. இருபத்துமூன்று வயதில் அரிய சாதனைகள் புரிந்த சின்னஞ்சிறு பெண்!!
சென்ற ஜூலை மாதம் சைவ வேளாளர் பேரவையின் முப்பெரும் விழாவில் சாதனைகள் புரிந்த பல பெருமக்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்கள். மற்றவர்களெல்லாம் சாதனை புரிந்தவர்கள். ஆனால் செல்வி வேதா பகவதி மட்டுமே சாதனைகள் நிகழ்த்த ஆரம்பிக்கும் போதே விருது பெறும் பேறு பெற்றிருக்கிறார். சைவவேளாள சமூதாயம் மட்டுமல்ல பெண் இனமே இவரால் பெருமையடைகிறது.
கீழ் வரும் படங்களை பெரிது பண்ணிப் பார்த்தால் இவரது சாதனைகள்...அதுவும் இந்த வயதில் வியக்க வைக்கிறது!!

முழுதும் பெண்களாலேயே இயக்கப்பட்டு இலங்கை சென்ற ஏர்-இந்தியா விமானத்தை இயக்கிய பெண் பைலட்டுகளில் இவரும் ஒருவர். உலக மகளிர் தினத்தன்று நிகழ்ந்த இந்நிகழ்வால் அத்தினத்துக்கே பெருமை சேர்த்துள்ளார்.

பேரவையின் முப்பெரும் விழாவில் இவருக்கும் தமிழ் பேராசிரியர் சாரதா நம்பியாரூரன் அவர்களுக்கும் 'திலகவதி அம்மையார் விருது' வழங்கி கௌரவித்தனர். இருவரும் மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.
சாரதா நம்பியாரூரன் பேசும் போது குறிப்பிட்ட்டார்...'என் அருகே அமர்ந்திருந்த வேதா பகவதி, திலகவதி அம்மையார் என்பவர் யார் என்று கேட்டாள். சின்னப் பெண்ணான அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் நான் சொன்னேன், திலகவதி அம்மையார்
வாழ்கையில் பல துன்பங்களை அனுபவித்தவர். ஆனாலும் துவண்டுவிடாமல் போராடி வாழ்கையில் ஜெயித்தவர். என் வாழ்கையிலும் எதிர்படாத துன்பங்கள் இல்லை, அது கண்டு
துவண்டு விடாமல் தன்னந்தனியே போராடி வெற்றி கண்டு நிமிர்ந்து நிற்கிறேன். நீயும் அது போல் இனி வரும் இடர்களைக் கண்டு சேர்ந்துவிடாமல் போராடி ஜெயிக்க வேண்டும். அதற்காகத்தான் உனக்கும் எனக்கும் இவ்விருதினை வழங்கியிருக்கிறார்கள்!!' என்று சொன்னேன்.' என்றார்.
அவர் ஜெயித்து மீண்டுவிட்டார். வேதா பகவதியும் ஜெயிக்க வேண்டும் என்று நாமெல்லோரும் வாழ்த்துவோம்.
எல்லாப் பெருமையும் இறைவனுக்கே என்பது போல் இப்பெருமைகள் யாவும் அவளைப் பறக்க வைத்து அண்ணாந்து பார்த்துப் பெருமைப் படும் வேதா பகவதியின் பெற்றோருக்கே!!