Saturday, May 19, 2007

பெட்டகத்தை திற்ந்து விடையை அள்ளித் தருக-2

சென்ற பதிவில் கேட்ட கேள்விகளுக்கு..ஒரே ஒரு கேள்விக்குத் தவிர மற்றவற்றுக்கு பதிலில்லை.
இதோ புதிய கேள்விகள்!!

1) M.G.R., சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் எது?

2) சிவாஜியுடன் அதிகப் படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை யார்?

3) ஜெமினிகணேசன் கிறிஸ்தவ பாதிரியாராக 'தோன்றிய' படம் எது?

4) 'மாமன்மார் மூவர் தம்பி, நல்ல வாழ்வளிக்க வருவார்' - என்ற பாடல் வரியில் வரும் மாமன் மூவர் பெயர்கள் என்ன?

5) பாலச்சந்தர் டைரக் ஷனில் சிவாஜி நடித்த இரண்டு படங்கள் எவை?

6) ஒளவையார் பிள்ளையாரிடம், 'நான் உனக்கு நான்கு தருவேன்..நீ எனக்கு
மூன்று தா!' எனக்கேட்ட நான்கும் மூன்றும் என்ன என்ன என்ன என்ன?

17 comments:

  1. நானானி,
    முதல்ல கூண்டுக்கிளிதானே.
    பாலச்சந்தர் படத்தில சிவாஜி நடித்தாரா.

    மாமன்மார் மூவர் ராஜசேகரன்,ஞானசேகரன்,குணசேகரன்
    வரிசை மாறி இருக்கலாம்.

    ReplyDelete
  2. வல்லி!
    கூவி அழைத்ததும் குரல் கொடுத்தற்கு
    நன்றி.
    முதல் விடை சரி
    இரண்டு படங்களில் நடித்துள்ளார். முயன்று பாருங்களேன்.
    வரிசை சரி..ஆனால் ராஜ..அல்ல
    சந்திரசேகரன். மீதி என்னவாயிற்று?
    முதல் பெட்டகத்தை திறக்கவில்லையா?

    ReplyDelete
  3. நானானி,
    உங்களுக்கு எழுதின பின்னூட்டத்தை அருணாஸ்ரீனிவாசன் பெட்டியில் போட்டு இருக்கிறேன்.
    எப்படி என்று கேட்டால் பதில் இல்லை.
    அவ்வைப்பாட்டி கேட்டது சங்கத்தமிழ் மூன்று.
    கொடுப்பதாகச் சொன்னது பால்,தெளிதேன்,பாகு,பருப்பு.
    2
    சிவாஜியுடன் பத்மினி
    3,ஜெமினி...சுமைதாங்கி

    ReplyDelete
  4. நன்று,நன்று, மிக நன்று!
    பாலச்சந்தர் தான் பாக்கி...க்ளு தரவா
    இரண்டு படங்கள்..
    ஒன்று எஸ்.பாலச்சந்தர்
    இரண்டு கே.பாலச்சந்தர்..இப்போது
    எப்படி?
    முதல் பெட்டக்த்தையும் திறவுங்கள்.

    ReplyDelete
  5. 5. வீணைவித்தகர் எஸ்.பாலசந்தர் - அந்த நாள்

    ஏற்கனவே ஒரு பின்னூட்டம் அனுப்பியிருந்தேன் அது வரவில்லையா ?
    :-(

    ReplyDelete
  6. சரியான விடை! பா.ரா.கீதா!
    உங்கள் முந்தைய பின்னோட்டம்
    வரவில்லையே!
    இன்றைய வரவுக்கு நன்றி!

    ReplyDelete
  7. எதிரொலி - சிவாஜி, பாலசந்தர் படம்

    ReplyDelete
  8. கே.பாலசந்தர் - எதிரொலி

    ReplyDelete
  9. 1.கூண்டுக்கிளி
    2.கே.ஆர்.விஜயா
    4.சந்திரசேகரன்,ஞானசேகரன்,குணசேகரன்
    5.ஒன்று மட்டுமே ..எதிரொலி.

    ReplyDelete
  10. கே.பாலச்சந்தர் படத்துல சிவாஜி நடித்தது' 'எதிரொலி' படம்
    கேயார் விஜயா பேபி ரோஜாரமனி நடித்தது.
    சந்தர்ப்ப சூழலில் சிவாஜி ஒவ்வொரு தப்பாக செய்து மாட்டுவார்
    ஹைய்யா..கண்டுபிடிச்சிட்டேனே :))

    ReplyDelete
  11. கே.பாலச்சந்தர் படத்துல சிவாஜி நடித்தது' 'எதிரொலி' படம்
    கேயார் விஜயா பேபி ரோஜாரமனி நடித்தது.
    சந்தர்ப்ப சூழலில் சிவாஜி ஒவ்வொரு தப்பாக செய்து மாட்டுவார்
    ஹைய்யா..கண்டுபிடிச்சிட்டேனே :))

    ReplyDelete
  12. அஞ்சுல ஒரு பங்கு நமக்குங்க

    ReplyDelete
  13. sokkayi!
    மிகச் சரியான விடை. இன்னொரு பாலச்சந்தர் நினைவுக்கு வரவில்லையா?

    ReplyDelete
  14. வினையூக்கி!
    வரவுக்கு நன்றி. சரியான விடையும் கூட. ஏன் எல்லோரும் மற்றொரு பாலச்சந்தரை மறந்து விட்டீர்கள்? அந்த நாள் வீணையின் நாதம் காதுகளில் ஒலிக்கவில்லையா?

    ReplyDelete
  15. வாங்க வாங்க ஜோ!
    கே.ஆர். விஜயா அல்ல...நாட்டியப்பேரோளி...பத்மினி.
    மற்றவை சரி.
    உங்களுக்கும் விணையின் நாதம்
    கேட்கவில்லையா?

    ReplyDelete
  16. கண்மணி....
    ரொம்ப சரியாகத்தான கண்டுபிடிச்சிட்டீங்க...!சரி....
    ஐந்தில் ஒரு பங்கு அல்ல..ஆறில் ஒரு
    பங்கு! இருந்தாலும்..த.ந்.தோ.ம்!

    ReplyDelete
  17. எல்லாம் சரி.....வல்லியம்மாவைத் தவிர வேறு யாரும் ஆறு கேள்விகளுக்கும் விடை தரவில்லையே..?
    முதல் பெட்டகத்தையும் திறக்கவில்லை. ஏன்?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...