ஒவ்வொரு வருடமும்(சில வருடங்களாகத்தான்) மார்கழி மாதத்தில் ஏதாவதுஒரு நாள்....!
அருகிலுள்ள பெருமான் - பெருமாள் கோவிலுக்கு வீட்டிலேயே நான்..நானேதான்! பிரசாதம் செய்து எடுத்துப்போய் அர்ச்சனை, நெய்வேத்தியம்(சரியான வார்த்தைதானா?) செய்து அங்கே வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்துவிட்டு வருவேன்.
இன்று மார்கழி முதல் நாள்!! இவ்வருடம் முதல் நாளே பிரசாதம் செய்து வணங்கி வருவோம் என்று நினைத்துவிட்டேன்.
நேற்று கோவிலுக்குப் போய் என்ன கொண்டு வரலாம் என்று கேட்டதற்கு, 'வெண்பொங்கல்!'
என்றார்கள். தயிர்சாதம்தானே விசேஷம் என்றதற்கு, இங்கு வெண்பொங்கல்தான்...பிறகு உங்கள் விருப்பம் என்றார்கள்.
குழைய குழைய சாதம் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து
நறுக்கிய பச்சை கொத்தமல்லி தூவி தயிரும் பாலும் விட்டு வெண்ணையாய் பிசைந்து தயிர் சாதம் கொண்டு போக ஆசை!
நாம் கேட்டதையெல்லாம் கொடுக்கும் சாமிக்கு அவர் கேட்டதை கொடுப்பதை....அல்ல அல்ல சமர்ப்பிப்பதுதானே முறை?
ஆகவே வெண்பொங்கல் என்றே தீர்மானித்தேன்.
இரவே அடுப்பு, குக்கர், கடாய் எல்லாம் சுத்தம் செய்து மேடையில் ரெடி செய்துவிட்டு
என் செல்போனிடம் நாலு மணிக்கு எழுப்பச் சொல்லிவிட்டுகண்ணுறங்கப் போனேன். எங்கே...உறங்கினேன்? செல்போன் சொன்னபடி கேக்குமா....என்று முழித்து முழித்து பார்த்துக்கொண்டேயிருந்தேன். மூன்றரை மணிக்கே எழுந்து செல்போனை, 'நீ தூங்கு' என்று
அணைத்துவிட்டு குளித்து என் அந்தப்புரத்து அரசவைக்குள் நுழைந்தேன்.
என் வண்டிக்கு முதலில் 'எரிபொருள்' ஊற்றிவிட்டு வேலையை ஆரம்பித்தேன்.
அளவாக தண்ணீர் ஊத்தி குக்கரை அடுப்பில் ஏத்தினேன். நேரடியாக குக்கரிலேயே பொங்கல் வைப்பதற்காக அதன் கொள்ளளவான மூன்று கப் அரிசி, ஒன்றரை கப் பாசிப்பருப்பு கழைந்து
கொதிக்கும் நீரில் சேர்த்தேன். மூடியை மூடுமுன்னே கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி தாளித்து குக்கரில் விட்டு மூடினேன். அப்போதுதான் சாதம் வேகும் போதே
வெண்பொங்கல் வாசம் ஊரெல்லாம் மணக்கும். வெயிட்டைப் போடுமுன் மூடியைத்திறந்து...பாதி வெந்திருக்கும் பொங்கலில் தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட்டையும் வைத்தேன்.
ரெண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு குத்து முந்திரிப்பருப்பை நாலாக உடைத்து நிறைய நெய் விட்டு வறுத்து குழைய வெந்திருக்கும் வெண்பொங்கலில் வடித்து நன்றாக பிரட்டிக் கொடுத்தேன்.
வெண்பொங்கல்.....முழங்கை வழிவார நெய் தளதளக்க....முந்திரிப்பருப்பு...அங்கங்கே கண் சிமிட்டாமல் எங்கெங்கும் ஜொலிக்க, அட்டகாசமாய் தயாராயிற்று!!!!
பெரிய சம்புடம் நிறைய நிரப்பிக்கொண்டு, கோவிலில் சொன்னபடி ஐந்தரை மணிக்கு கோவில் வாசலில் நின்றேன்.
இங்கேதான் இருக்கு விஷயம்!!! என்னையும் ரங்கமணியையும் தவிர ஒரு பெண்மணியும் அர்ச்சனைக்காக நின்றிருந்தார். அன்றைய உபயதாரர் இன்னும் வரவில்லை. சுவாமிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரமும் ஆயிற்று. ஐந்தேமுக்காலுக்கு பூஜை! பத்து நிமிடங்கள் காத்திருந்தார் குருக்கள். அதற்கு மேல் கூடாதென்று என்னோட வெண்பொங்கலை பெருமாள், எம்பெருமான், வினாயகர், தட்க்ஷிணாமூர்த்தி ஆகியோருக்கு நேவேத்தியம் காட்டி கற்பூரம் காட்டி பூஜை முடித்தார் குருக்கள். அளவான கூட்டமும் கூடியது. அதன் பிறகே சுடச்சுட சர்க்கரைப் பொங்கலோடு வந்தார் உபயதாரர். அதையும் நேவேத்தியம் செய்து கற்பூரம் காட்டினார். வெண்பொங்கலையும் சர்க்கரைப் பொங்கலையும் மந்தாரை இலையில் வைத்து வைத்து எல்லோருக்கும் வினியோகித்தேன்.
இதிலிருந்து என் சிற்றறிவுக்கு என்ன தெரிந்தது...புரிந்தது? உலகுக்கே படியளக்கும் தெய்வங்கள், மார்கழி முதல் நாளில் நான்...என் கையால் செய்த வெண்பொங்கலைத்தான்
ஒரு வாய் உண்டிருக்கிறார்கள்!!!!!
இது நான் செய்த பேறா...? பூஜா பலனா?(அப்படியெல்லாம் பெரிசா ஏதுமில்லை..அது வேறு விஷயம்)
"ஆத்தாடி மாரியம்மா..சோறு ஆக்கிவச்சேன் வாடியம்மா...அழாக்கு அரிசியை பாழாக்க வேணாம்...தின்னுபுட்டு போடியம்மா!!" என்பது போல் என் எளிய பூஜையின் பலனென்றே எண்ணுகிறேன்.
மனமெல்லாம் சந்தோஷம் பொங்குதே...சந்தோஷம் பொங்குதே...!சந்தோஷம் என்னில் பொங்குதே!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
//குழைய குழைய சாதம் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து
ReplyDeleteநறுக்கிய பச்சை கொத்தமல்லி தூவி தயிரும் பாலும் விட்டு வெண்ணையாய் பிசைந்து தயிர் சாதம் கொண்டு போக ஆசை!
///
விவரிச்சிருக்கிறத பார்த்தா எனக்கு இப்ப திங்க ஆசையாயிருக்கு
:)))))
//வெண்பொங்கல்.....முழங்கை வழிவார நெய் தளதளக்க....முந்திரிப்பருப்பு...அங்கங்கே கண் சிமிட்டாமல் எங்கெங்கும் ஜொலிக்க, அட்டகாசமாய் தயாராயிற்று!!!!///
ReplyDeleteம்ம் :))
இதுதான்ப்பா கொடுப்பனை என்பது.
ReplyDeleteஅவனுக்கு யார் கையால் வேணுமோ அவனே வாங்கிப்பன்.
மனசு நிறைஞ்சுருக்கும் இல்லே?
அதுவே பெரு மகிழ்ச்சி.
//..நெய்வேத்தியம்(சரியான வார்த்தைதானா?)//
ReplyDelete`நைவேத்தியம்' சரியான சொல்.
அடுத்த பிரசாதம் தயிர்சாதம்தான்! அன்று வந்து என் கையில் வாங்கிக்கொள்ளுங்கள்..ஆயில்யன்!!
ReplyDeleteம்ம்ன்னா? வேண்டாமா?
ReplyDeleteபின்னே? மனசு நெறஞ்சுடுச்சு இல்ல!!
ReplyDeleteமிக்க நன்றி!! அ.நம்பி!!தெளிவு படுத்தியதற்கு!!முதல் வருகைக்கும்!!
ReplyDelete12:21PM!!! என்னை மாதிரி நீங்களும் ராக்கோழிதானா...துள்சி?
ReplyDeleteஇல்லை..இல்லை...ராப்பூனைதானா?யானைதானா?
எனக்கும் உங்களுக்கும் ஏழரை வித்தியாசம். மணியைச் சொன்னேன்ப்பா:-)))
ReplyDeleteஎனக்கு இப்போ பின்மாலை 8.08. உங்களுக்குப் பகல் 12.38:-)
எல்லாம் அவன்/அவள் அருள்.
ReplyDeleteபொங்கிய சந்தோஷம் என்றென்றும் நிலைத்திருக்கவும் அதே அருள் கிட்டும்.
வாழ்த்துக்கள்.
//குழைய குழைய சாதம் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து
நறுக்கிய பச்சை கொத்தமல்லி தூவி தயிரும் பாலும் விட்டு வெண்ணையாய் பிசைந்து தயிர் சாதம்//
கொண்டு போயிருந்தேன். நம்ம ஊர் ஸ்பெஷல் ஆச்சே இது. கூடவே ப.மி-யும் தாளித்து ஃப்ரஷ் பாலாடையும் சேர்த்துப் பிசைந்து. நான் எடுத்துப் போயிருந்த பட்டாணி புலாவ்வை விட எல்லோரும் இதை விரும்பிச் சாப்பிட்டார்கள். எங்கே கோயிலில் புலாவ்வா? என அதிர்ச்சி ஆகி விடாதீர்கள். கடந்த மாதம் பெங்களூர் கப்பன் பார்க்கில் நடந்த பதிவர் சந்திப்புக்கு:)!
சரி...சரி...புரிஞ்சுது.
ReplyDeleteபதிவர் சந்திப்பா..? ஷொல்லவேயில்லையே?
ReplyDeleteயார்யாரையெல்லாம் சந்தித்தீர்கள்?
பதிவிடலாமே!!!!
பதிவிட வேண்டாம் என்பது சந்தித்த பதிவர்கள் எல்லாருமே ஏகமனதாக செய்த முடிவு. இனிய சந்திப்பு. ஷொல்றேன் உங்களுக்கு, சேரியா?
ReplyDeleteவெண்பொங்கல்.....முழங்கை வழிவார நெய் தளதளக்க....முந்திரிப்பருப்பு...அங்கங்கே கண் சிமிட்டாமல் எங்கெங்கும் ஜொலிக்க, அட்டகாசமாய் தயாராயிற்று!!!!//
ReplyDeleteஆஹா,
ஹைதைக்கு ஒரு பார்சல் அனுப்பிடுங்களேன்.
எனக்கு வெண் பொங்கல் ரொம்ப பிடிக்குமே.... பதிவில் படிக்கும் போதே நாவு ஊருகின்றது.. ;)
ReplyDelete///அவனுக்கு யார் கையால் வேணுமோ அவனே வாங்கிப்பன்.///... ம்ம்ம்ம்
ஷொல்லுங்கோ....ராமலக்ஷ்மி!!!
ReplyDeleteஹைதைக்கு ஹைஸ்பீடில் வருது..புதுகைத்தென்றல்!!
ReplyDeleteதமிழ்பிரியன்! வெண்பொங்கல் கொஞ்சம் ஆறிடுச்சே...?
ReplyDeleteஆம்! அவனே வாங்கிண்டான்.
தயிர்சாதம் எல்லாம் எங்கள் ஆழ்வார்குறிச்சியில்தான். மாமா வீட்டின் அருகில் பெருமாள் கோவிலில் சிறுவனாக இருந்தபோது பூவரச இலை பறித்துச் சென்று வாங்கியிருக்கிறேன். சென்னையில் இப்போது அது முடியுமா? குருக்கள் தனக்கு என்ன பிடிக்குமோ அதைக் கேட்டிருக்கிறார்.
ReplyDeleteமுந்திரிப்பருப்பு நான்காக உடைத்து என்று சொன்னீர்களே,, அது ஏன் எல்லோரும் செய்ய மாட்டேன் என்கிறார்கள் என நான் நினைப்பேன். துண்டு துண்டாக இருந்தால் நிறைய பேருக்குக் கிடைக்குமே. நீங்கள் அப்படி செய்தது மகிழ்ச்சி.
சகாதேவன்
நாலாக உடைத்த காரணத்தை சரியாகப் புரிந்து கொண்டீர்கள்...சகாதேவன்! அதனால்தான் எங்கெங்கும் ஜொலித்தது.
ReplyDeleteகுக்கரில் நேரடியா வைக்கும் கலை இன்னும் கைவரலைப்பா. அப்படியே பொங்கி வெயிட் வைக்கும் துளைவழியா ஹிஸ்ஸும்.
ReplyDeleteஅதனால் பெரிய பிரமாண்டக் குக்கரில் உள்ளே இண்செட் வைச்சுதான் நம்ம பொங்கல் எல்லாம்.
//மூன்றரை மணிக்கே எழுந்து செல்போனை, 'நீ தூங்கு' என்று
ReplyDeleteஅணைத்துவிட்டு //
ஆஹா. விவரித்த விதம் அழகு.
//விவரிச்சிருக்கிறத பார்த்தா எனக்கு இப்ப திங்க ஆசையாயிருக்கு //
இதுக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்டு
//ஷொல்லுங்கோ....ராமலக்ஷ்மி!!!//
இதுக்கும் ஒரு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.
தோஷம் எல்லாம் விலக சந்தோஷம் மட்டும் நிலைக்க மார்கழி மன்னன் ஆசி கூறுகிறார்.இதோ
ReplyDeleteஇங்கே சொடுக்க
http://picasaweb.google.com/ngomathi/DropBox?authkey=R5icEgXxt40#5280599084472385426
துள்சி! குக்கரின் கொள்ளளவுக்கு கொஞ்சம் குறைவாகவே அரிசி வைத்தால்....நோ...ஹிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....நோ...ஃப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!
ReplyDeleteசேரியா?
கொஞ்சம் உருண்டு புரண்டு கண்டுபிடிச்சிக்க வேண்டியதுதான்.
ReplyDeleteஉங்க ரிப்பீட்டுக்கெல்லாம்...டாங்கஸ்ஸ்!
ReplyDeleteஇதையும் ரிப்பீட்டிக்கலாம். சதங்கா!
அழகான பெருமாளின் தரிசனம்!!!!
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு கோமா!