விஜய் டீவீயில் "சூப்பர் சிங்கர்" ஜூனியருக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் பெற்றொர்களின் அவசரமும் குழந்தைகளின் அதீத ஆர்வமும் கலந்து கட்டி நிகழ்ச்சியை ஒரு வழி பண்ணிக்கொண்டிருக்கிறது.
சிறுவன் ஒருவன் பாட வருகிறான்...பாடி முடித்ததும் சிகப்பு விளக்கு எரிய ரிஜெக்ட் செய்யப்படுகிறான். ஓகேன்னு கம்பீரமாக வெளியேறினால் வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக்கொண்டான் எனலாம். மாறாக, "மேம்..மேம்..இன்னொரு சான்ஸ் கொடுங்க..ப்ளீஸ்! இம்முறை நன்றாகப் பாடுகிறேன்" என்று கெஞ்சுகிறான். ஜட்ஜோ..."சாரிடா..கண்ணா! இன்னும் நிறைய பேர் காத்துக்கொண்டிருக்கிறார்களே!!அடுத்த முறை நல்ல ப்ராக்டீஸ் செய்துவிட்டு வா!" என்று வழியனுப்புகிறார்கள்.
அடுத்ததாக ஒரு சிறுமியும் அவளது அம்மாவுமே பாடுமிடத்துக்கு வருகிறார்கள். அம்மா இல்லாமல் பாட வராது போலும். அவளும் ரிஜெக்ட் செய்யப்பட இம்முறை அம்மாவே குய்யோ முறையோ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார். "வீட்டிலே நல்லாத்தான் பாடினாள். இப்போ மறுபடியும் பாடுவாள் பாருங்கள்...!" அனுமதியில்லாமலே மகளைப் பாடச் சொல்கிறார். என்ன...என்ன...இது? என்ன வகையான போட்டியிது?
குழந்தைகளை பாடச் சொல்லிக்கொடுக்கும் போதே வெற்றி தோல்வியைக் கண்டு மிரளாமல், அழாமல், தைரியமாக இருக்கக் கற்றுக் கொடுப்பதும் பெற்றோர் கடமைதானே? மாறாக அவர்களே துவண்டு, குழந்தைகளையும் துவளச்செய்து.....பார்க்கும் நமக்கும் கண்றாவியாய் இருக்கிறது. எங்க போய் முட்டிக் கொள்ள..?
நம் குழந்தைகளின் திறமையின் அளவுகோல் நமக்கே தெரிந்திருக்க வேண்டும். இந்த அளவில் ஏற்றுக்கொள்வார்களா...மாட்டார்களா..? என்பது நமக்கே தெரிந்திருக்க வேண்டும்.
இதை விட வேடிக்கை....பால்மணம் மாறா குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்து,
வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், "கண்ணா! மாமாக்கு "அடியே கொல்லுதே! பாடிக்காட்டு!" என்போமே அந்த ரீதியில் சில பிஞ்சுகள் பாடும்போது,அதுவும் போட்டிக்களத்தில், நமக்கு பாவமாயிருக்கும்.
பெற்றவர்களின் பேராசை, குழந்தைகளின் மனத்தை எவ்வளவு தூரம் காயப் படுத்தும் என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.
அந்தக்காலம் போல் இல்லை...இப்போது குழந்தைகளுக்கு நிறைய, விதவிதமான எக்ஸ்போஷர்கள் இருக்கின்றன. முறையான சமயத்தில் தெளிவான திறமையோடு மேடையேற்றலாமே? வேண்டும் கொஞ்சம் பொறுமை!!!!!
இதையெல்லாம் பாக்கும் போது, என் ரெண்டரை வயது பேரன், "குட்டி! கண்களிரண்டால்..பாடு!" என்றதும் "நுன்னுனி..நுன்னுனி..." என்று மழலையில் ரொம்ப ரசித்துப் பாடுவான். அவனுக்குப் பிடித்த பாட்டு.
அடுத்தவார சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிக்கு
அவனை அழைத்துப் போகட்டா.........?
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
MY 9-WEST!!!! எல்லோரும் திண்ணைகளில் உட்கார்ந்து தேய்த்த பிறகு அதை புதுப் பொலிவோடு ரெனவேட் செய்து தந்திருக்கிறேன். தெருவிலிருந்து படியேறினால்...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
"அம்மம்மா..தம்பி என்று நம்பி.."என்று எலக்ட்ரிக் ட்ரெயினில்
ReplyDeleteரெண்டு டேபிள்டென்னிஸ் பாட்டை தட்டிக் கொண்டு வருவார்களே...அது போலத்தானிருக்கு. என்ன? அங்கே காசு போடுவார்கள்...இங்கே பச்சைவிளக்குப் போடுவார்கள்.
ஹ்ம்ம் எனக்கும் இந்த நிகழ்ச்சி பார்க்கும்போது இப்படி தான் தோன்றியது.
ReplyDeleteராஜா/KVR,
ReplyDeleteஅப்ப நீங்களும் நம்ம கட்சி!!!
நல்ல பதிவு. இது சம்பந்தமாக உயிர்மையில் வெளியாகியுள்ள எனது கட்டுரை இங்கே..
ReplyDeletehttp://uyirmmai.com/ContentDetails.aspx?cid=1674
மேடம்...
ReplyDeleteசூப்பர் சிங்கர் போட்டியில் நடுவர் மேல் உங்க பேரப்பிள்ளை உச்சா போக, அதை காமிரா கவர் செய்ய, நடுவர் அவ்வ்வ்வ்வ் என்று அழ, உங்கள் பேரப்பிள்ளை ப்ளீஸ் ஓட் பார் மீ என்று கேட்க...இதை வைத்தே நிகழ்ச்சிக்கு விளம்பரம் வர...அதனாலேயே உங்கள் பேரப்பிள்ளை நேரடியாக பைனல்ஸுக்கு தேர்வு செய்யப்பட, அதில் நேரு ஸ்டேடியத்தில் ச்ச்சுச்சும் ச்ச்சும்மி ச்ச்சுழ்ழ்ழே என்று பாடி வெற்றிபெற..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அப்ப நீங்களும் நம்ம கட்சி!!!//
ReplyDeleteநானானி, சீக்கிரம் கூட்டணிக்கும் ஆள் தேடுங்க. வரப் போற இடைத்தேர்தல்ல நிண்ணு குறைந்தது ஐந்து தொகுதியாவது வெல்லணும் (இருக்கிறதே அவ்வளவு தான்).
தொலைக்காட்சிகளும் இப்படி அழுதால் காரியம் சாதிக்கலாம் என்ற மனப்பான்மையை மக்களிடம் விதைக்குதோன்னு சந்தேகமா இருக்கு. அதைப் பற்றி என்ன நினைக்கிறிங்க?
எம்.ரிஷான் ஷெரீப்!
ReplyDeleteநல்லது..நல்லது. உங்க பதிவை படிச்சுட்டு சொல்றேன். நன்றி!!
செந்தழல் ரவி,
ReplyDeleteஎன் பேரன் இம்மாதிரியெல்லாம் லொள்ளு பண்ணி வெல்லமாட்டான்.
உரிய நேரத்தில் நல்ல பயிற்சி கொடுத்து, வெற்றி தோல்வியை சமமாக பாவிக்கும் மனப்பக்குவத்தையும் கற்றுக் கொடுத்து, நல்ல இசை மழலையாக உருவாக்குவோம். சேரியா?
ராஜா,
ReplyDeleteஹையோ! இந்த கட்சியெல்லாம் நமக்கு வேண்டாம்(உங்களையும் சேத்துத்தான்). நம்ம கட்சி "இசைக் கட்சி"
நானும் அதேயேதான் நினைக்கிறேன். தமிழில் "அழுது காரியம் சாதிப்பது" எனக்கு பிடிக்காத வாக்கியம்!!!!
இந்த மாதிரி நிகழ்ச்சி வந்தாலே நான் சேனலை மாத்திடுவேன்.. அரட்டை அரங்கம், மானாட மயிலாட, பூகி ஊகி எல்லாம் எனக்கு பிடிக்காத நிகழ்ச்சிகள் மாதிரி ஃபீல் பண்ணுவேன்
ReplyDeleteபரிதாபமேதான்.
ReplyDelete//முறையான சமயத்தில் தெளிவான திறமையோடு மேடையேற்றலாமே? வேண்டும் கொஞ்சம் பொறுமை!!!!!//
தலைப்பில் மட்டுமின்றி இவ்வரிகளிலும், நன்றாகக் கேட்டிருக்கிறீர்கள். சொல்லியிருக்கிறீர்கள்.
இப்போது இந்நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை என்றாலும் பார்த்த காலத்தில் பதிந்த என் எண்ணங்கள்.
ரிஷானின் கட்டுரையையும் சமீபத்தில் வாசித்தேன். சிந்தனையைத் தூண்டும் பதிவு தங்களதைப் போலவே.
பேரன் பாடுவது என் காதில் விழுகிறது
ReplyDelete"நுன்னுனி..நுன்னுனி...நானானி நானானி "நுன்னுனி..நுன்னுனி.நானானி நானானி.".." ....சூப்பர் சிங்கர் பட்டம் பேரக்குட்டிக்குத்தான்
டீ ஆர் பீ ரேட்டிங் கொடுமைக்காக இவங்க அடிக்கற கூத்துக்களை கேட்க ஆளில்லாமல்தான் போச்சு, நாமாவது பார்க்காமல் இருக்கலாமேன்னு சுறுசுறுப்பான போட்டி ஆரம்பித்தாலும் கூட நான் இவைகளை பார்ப்பதே இல்லை.
ReplyDeleteநீங்கள் பதிவில் சொல்லியிருப்பது போல் நடக்கும் நடவடிக்கைகளை கண்டு மனசு வலிக்கும் .
எல்லாம் கெட்டுக்கிடக்கு. எங்கெபோய் முட்டிக்க?
ReplyDeleteபேரக்கிடா எப்போ பாடப்போறான்னு சொல்லுங்க. நான்வேணுமுன்னாத் துணைக்குப் போறேன்.:-)
நானானி, நான் உங்களோட இசைக் கட்சிதான். குழந்தைகளை எந்த விதமான இம்சைக்கும் ஆளாகக் கூடாது
ReplyDeleteஎன்பதில் வேறு ஒரு நிலைப்பாடும் எடுக்கக்
காரணம் கிடையாது.
இந்த அளவு கூத்து நடந்திருக்கா. அட ஆண்டவா ....
ReplyDeleteசமீபத்தில தான் இந்த நிகழ்ச்சி பாக்க ஆரம்பிச்சிருக்கோம். என்னடா பசங்க எல்லாம் சமத்தா, ரிஜெக்டட்னா கூட பெரிய மனுசன் மாதிரி, ஓகேனுட்டு போறாங்களேனு பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டோம் !!!
உங்க பதிவு பலமா அங்க ஒலிச்சிருச்சு போல :)))