சனிக்கிழமை 8-1-11 காலை 8-மணிக்கு ஈ.சி.ஆர். சாலையில் உள்ள வி.ஜி.பி. கிங்டம்.
பார்கிங் லாட்டின் இருபுறமும் அழகாக, பெருமிதத்தோடு அணிவகுத்து நிற்கிறது பழம்பெருமை வாய்ந்த கார்கள். ஒவ்வொன்றாக உள்ளே நுழைந்து கம்பீரமாக காலியிடங்களை நிரப்புகிறது. என்ன அழகு!!!
சுமார் நாற்பது கார்களுக்கும் மேல் கலந்து கொண்டன.
தி ஹிந்து பத்திரிகையும் பாண்டிச்சேரி டூரிசமும் சென்னை மோட்டார் க்ளப்பும் சேர்ந்து நடத்திய ‘விண்டேஜ் கார் ராலி’.
p>
"அழகிய மிதிலை நகரினிலே..."என்று பாடத்தோன்றுகிறதா? டூரர் 1946
ஸ்டெப்னியை எங்கே இடுக்கிக்கொண்டிருக்கிறது பாருங்கள்!!!
பழைய மிலிடிரி ஜீப்...புத்தம் புதுசாக. இதைப் பாத்ததும் இவருக்கு அவரது ஆபீஸ் ஜீப் ஞாபகம் வந்துவிட்டதாம்!! வில்லீஸ் ஜீப் 1948
பென்ஸ் டூரர்!!கன்வர்டிபிள்....டூ சீட்டர்.
ஹிந்துஸ்தான் 14 - 1950.
இதே போல் கருப்பு கலர் கார்.....நான் மாமியார் வீட்டிலிருந்து பொறந்த வீட்டுக்கு வர காருக்கு போன் செய்தால், போனை எடுக்கும் விடலைப் பருவத்து அண்ணன் மகன்கள் சந்தர், பாபு யாராவது ஒருவர்....லைஸன்ஸ் இல்லாமல் போன் செய்த பதினைந்தாவது நிமிடம் பறந்து வருவது இந்த மாடல் காரில்தான்.
வோக்ஸ்வாகன் பீட்டில் 1964. ‘ரெண்டாக உடைந்து சர்க்கஸ் வேலையெல்லாம் காட்டேன்!’ என்றேன். அதுக்கு என்ன மூடோ இந்த பாட்டி சொல்லை தட்டிவிட்டது. ரொம்பத்தான் இது!!!! எது? பீத்து!!
ஸ்டுடிபேக்கர் பிரஸிடெண்ட் 1956.
பக் பியட் டூரர் 1952.
ஆஸ்டின் 1927 மாடல். வந்ததிலேயே பழையது. நாலு வயசில் நான் காவாயில் உருட்டியது.
உள்ளே எவ்வளவு சுத்தமாகவும் புதிதாகவும் உள்ளது!!
ப்ரவுட் ஓனரம்மா!!! ’உங்க வண்டி ‘ப்ராண்ட் நியூவாக இருக்குது.’ என்றதும் சந்தோஷம்!!!! இருக்காதா பின்ன?
மோட்டர் சைக்கிளின் வீலை கழற்றி மாட்டியிருக்குதோ?
செல்ப் ஸ்டார்டர் வேலை செய்யலைன்னா.... கீ போட்டு ஒரு சுத்து சுத்தினா...டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஸ்டாட்டாயிடும்!!!
ராலியில் ஓட கிளம்பிவிட்டது, பின்னழகைக் காட்டி!!!
1948 மாடல் செவர்லெட் ஸ்டைல் லைன்!
பியட் மிலிசெண்டோ 1100.
ஆண்டிக் லுக்கோடு மற்றொரு பேபி ஆஸ்டின். அதன் கியர் கண்ணுக்க்குள்ளேயே நிற்கிறது.
அதுக்கும் பழைய நினைவு வந்துட்டுதோ? என்னை அருகில் அழைத்து படமெடுத்துக் கொண்டது.
எங்கள் செல்லம்!!! ஆனால் இது வேறு மாடல். இது நம்ம காரா என்று எங்க வீட்டு முதல் வாண்டுவைக் கேட்டால்,’ஹூஹும்!’ என்று சொல்லிவிட்டு இது எப்படியிருக்கிறது என்று செய்கையால் காண்பிப்பான். ஈன்னு சிரிச்சிட்டு ஆள்காட்டி விரலை வாயில் உஷ்...என்பதுபோல் வைத்துக்கொண்டு.
நானே ஓஓஓடிப் போய் அருகில் நின்று ஆசையாய் படமெடுத்துக் கொண்டேன். செவர்லெட் ஃப்ளீட்மாஸ்டர் 1948
வாக்சால் கார். நல்ல தெளிவாயிருக்கிறது.
கிரிக்கெட்டுக்குத்தான் சியர் கெர்ல்ஸ் தேவையா என்ன? இங்கேயும் உண்டு. பியட் எலிகண்ட் 1957. எங்கள் ஸ்கூல் கார். முன் கதவைத் திறந்து உள்ளே உக்காருவதே ஸ்டைலாயிருக்கும். மீசைக்கார ட்ரைவர் பிள்ளைகளை ஒன்று சேர்த்து, கதைகள் சொல்லியபடி பத்திரமாக அழைத்து வருவார்.
ப்ளைமவுத் சவாய் சடான் 1956!!! அக்காலத்தில் அலட்டலின் அடையாளமாக இருந்தது.
பாயும் புலிச் சின்னத்தோடு...ஜாகுவார் 1968!!!
பென்ஸ் டூரர் 1961! தன்னை பார்க் செய்து கொள்கிறது.
டி.ஜி.பி. லத்திகா சரண்,
கொடியசைத்து ராலியை துவக்கி வைக்க வருகிறார்.
பழைய கார்களை பாசத்தோடு பொக்கிஷம் மாதிரி பாதுகாத்து பார்வைக்கு வைக்கும் உரிமையாளர்களின் ஆர்வத்தை பாராட்டுகிறார். உண்மையில் அந்த உரிமையாளர்கள் முகங்களில்தான் எத்தனை பெருமை, மகிழ்ச்சி!!!!
அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசு.
இவ்விழாவை நடத்தும் தி ஹிந்து, சென்னை மோட்டார் க்ளப், புதுச்சேரி டூரிஸம் ஆகியோருக்குப் பாராட்டு.
டி.ஜி.பி லத்திகா சரண் ‘கொடி அசைத்ததும் முதல் வண்டி கோலாகலமாக கிளம்புகிறது.
எங்க செல்லமும் கிளம்பிட்டான்யா.....கிளம்பிட்டான்யா!!!
உள்ளே அப்பா இருப்பது போல் ஒரு நெனப்பு.
செல்லமே! உன்னையும் நல்ல, ஓடும் நிலமையில் பாதுகாத்து வைத்திருந்தால் நீயும் இது போல் ராலியில் கம்பீரமாக சென்றிருக்கலாமல்லவா? நாங்களும் உன் மீது பெருமையோடும் பெருமிதத்தோடும் ஊர்கோலம் போயிருப்போமல்லவா?
செவர்லெட் ஃப்ளீட்மாஸ்டர் 1947!!
அன்று வி.ஜி.பி.க்கு வந்திருந்த பார்வையாளர்களில், கேமராவும் கையுமாக அலைந்தவர்களில் அறுபத்தைந்தை தாண்டிய ஒரே...ஒரு விண்டேஜ் வுமன்.......நாந்தான் நாந்தான் நானேதான்!!!!! நான் ஒருவள் மட்டும்தான்.பி.கு.
இந்த ராலியில் செவர்லெட்டிலோ அல்லது ஆஸ்டினிலோ சிறிது தூரம் ஒரு ரைட் கேட்டிருந்தால் போயிருக்கலாமோ என்று கேட்டேன். ‘அட! முதலிலேயே சொல்லியிருந்தால் போயிருக்கலாமே! ஓனர்களும் சந்தோசமாக சேரி என்றிருப்பார்களே!! என்றார் ரங்ஸ். ராலி கிளம்பிய பிறகல்லவா அந்த எண்ணம் தோன்றியது. அதுவரை கேமராவும் கையுமாக அல்லவா அலைந்து கொண்டிருந்தேன்!!!!! இதுவே சந்தோஷம்!!!! அந்த ரெண்டு கார்களையும் பார்க்கும் ஆசையில்தான் போனேன். நிறைய படங்கள் எடுத்தேன். அத்தனையும் போட்டால் பதிவும் ஒரு ராலி மாதிரி ஆகிவிடும். போரும் அடிக்கும். ஆகவே குறைந்த பட்சம் சில பல படங்கள். சேரியா?
மீதியும் வேண்டுமானால் இன்னொரு பதிவுதேன்!!!!
நிஜம்மாவே இதுக்கு இதுக்குத்தான் காத்திருந்தேன்....நம்பிக்கையோடு 9-வெஸ்ட் வந்தேன் ...அற்புதம்
ReplyDeleteசகல பதிவர்கள் சார்பில், நானானிக்கு
ReplyDelete“கார் காதலி கல்யாணி”என்ற பட்டத்தை மகிழ்ச்சியுடன் சூட்டுகிறேன்.
விண்டேஜ் 'விஷயங்கள்' ப்ரமாதம்.
ReplyDeleteஅழகா chicன்னு மிடுக்கா இருக்கீங்க!!!!
பேஷ் பேஷ்.
இனிய பாராட்டுகள்!
மோட்டார் சைக்கிளின் சக்கரம் மாதிரி இருக்கேன்னு நினைச்சுட்டே வந்தேன். நீங்களும் சொல்லியிருக்கீங்க :-))
ReplyDeleteரெட்டை ஜடை போட்டுக்கிட்டிருப்பது நீங்கதானே :-)))
நானானி, பத்த வச்சுட்டீங்களே நினைவை:(
ReplyDeleteஅந்த ஃபியட் தான் எங்க முதல் வண்டி.விலை எட்டாயிரம்.
அதில நாங்க சுற்றாத இடமே கிடையாது. பின்னால வாங்கினது பக்ஃபியட்.
பிள்ளைகளும் சின்னவங்க. நாங்களும் ஒல்லியாக இருந்தோம்.
உங்களை யாரும் விந்டேஜ்னு சொல்ல முடியாது. அப்படிப் பளிச்சுனு ராலாவோட அக்கா மாதிரி இருக்கீங்க:)
படங்களுக்கும் மிகவும் நன்றிப்பா. அந்த ப்ளிமத்ல தான் எங்கள் நெல்லை சுற்றுலா 57 ல 1957... நடந்தது:)))
மிக அருமையான பகிர்வு:)!
ReplyDeleteமனம் விட்டு அகலா மலரும் நினைவுகளையும் கிளப்பி விட்டது பதிவு!
Arumai Amma
ReplyDeleteகோமா,
ReplyDeleteசந்தோசம்! நாம் குடும்பத்தோடு போயிருக்கலாம். நல்லாருந்திருக்கும்.
கோமா,
ReplyDelete//“கார் காதலி கல்யாணி”//
நல்லாருக்கே!!!! கா.கா.க.!
மிக்க நன்றி!!!
துள்சி,
ReplyDeleteநான்கு நன்றிகள்! உங்கள் நாலு வரிகளுக்கும்.
நான் எப்பவுமே மிடுக்குதான்!!
அமைதிச்சாரல்,
ReplyDeleteநானேதான்!!
வல்லி,
ReplyDelete//உங்களை யாரும் விந்டேஜ்னு சொல்ல முடியாது. அப்படிப் பளிச்சுனு ராலாவோட அக்கா மாதிரி இருக்கீங்க:)//
அதெப்படி? நான் விண்டேஜ் 1945 மாடலாக்கும்!!!
அதாருங்க ராலா?
வல்லி
ReplyDeleteஅப்ப நீங்களும் பிளிமத்-ல சாவாரி செய்து அலட்டிருக்கீங்க?
எனக்குத் தெரியும் உங்களுக்கும் பத்திக்கும்முன்னு.
ராமலக்ஷ்மி,
ReplyDeleteநன்றி! எல்லாத்துக்கும்!!!
Rathnavel,
ReplyDeleteThanks!!!
அழகிய காட்சிகள்.இரட்டை ஜடையும் :)
ReplyDeleteஅது ஒரு கார் காலம். எங்கள் வீட்டில் இருந்த கார்களை பத்திரமாக வைத்திருந்தால் ராலி நடத்தலாம்.நீங்கள் சொன்ன பேபி ஆஸ்டின்(MDT 847), செவர்லே(MDT 1330, MDT 1485), ஜீப்(MSP 810), பியட் 1100(MDT 4115), எல்லாம் இருந்தது.
ReplyDeleteசெவர்லே 1485, கோயம்புத்தூரில் ரெஸ்டோர் ஆகிக்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ராலிக்கு சென்னை கொண்டு வர ஆசை.
சகாதேவன்
கோமா,
ReplyDeleteசந்தோசம்! நாம் குடும்பத்தோடு போயிருக்கலாம். நல்லாருந்திருக்கும்.
January 12, 2011 3:25 PM
போயிருக்கலாம்தான்...நம்மை எல்லோரையும் பார்த்து நாலுவீல் வின்டேஜ் எல்லாம், “தோடா !!!1932 மாடல்,35 மாடல்,41 மாடல்,45 மாடல் ,தி கிரேட் 47 செவர்லே மாடல் ,ரெண்டு வீல் வின்டேஜ் எல்லாம் வராங்க...”ன்னு சொல்லும் தேவையா???
மாதேவி,
ReplyDeleteஇப்ப ரெட்டை ஜடை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.
சகாதேவன்,
ReplyDelete//செவர்லே 1485, கோயம்புத்தூரில் ரெஸ்டோர் ஆகிக்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ராலிக்கு சென்னை கொண்டு வர ஆசை.//
ஆஹா....! எவ்வளவு நல்ல சேதி சொல்லியிருக்கிறீர்கள்!!!அடுத்தாண்டுக்காக காத்திருப்பேன்!!
விட்டுவிட்டீர்களோ என்று நினைத்தேன்.
‘யாரங்கே! நல்ல சேதி சொன்ன சகாதேவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் கொண்டு வா!!!’
கோமா,
ReplyDeleteநாந்தான்....நான் 1945 மாடல்ன்னு சொல்லியிருக்கிறேனே! அவகள் சொன்னால் சந்தோசமாக கேட்டுக்கலாம்.
சகாதேவன் சொன்ன தகவல் பாத்தீங்களா? அடுத்த வருடம் நாமும் நம்ம வண்டியில் ராலியில் உருளப் போகிறோம்!!!ஹையா!!