பச்சை புலாவ் பற்றி முன்பே குறிப்பு தந்திருக்கிறேன். இருந்தாலும் மறுபடி ஒரு செய்முறை விளக்கம் தருகிறேன். அரை மணி நேரம் ஊற வைத்த பிரியாணி அரிசி, கொத்தமல்லி, புதினா அரைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை ஜூஸ், பட்டாணி, தோலுறித்து நறுக்கிய நுங்கு துண்டுகள்.
பாத்திரத்தில் எண்ணை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு, பட்டாணி சேர்த்து வதக்கி, அத்துடன் பிரியாணி அரிசி, பச்சை விழுது சேர்த்து நன்கு வதக்கி அளவான தண்ணீர்(விரும்பினால் சிறிது தேங்காய் பால்) விட்டு கலக்கி மூடி வைக்கவும். முக்கால் பதம் வந்ததும் ,
நுங்கு சேர்த்து கலக்கி, லைம்ஜூஸ் விட்டு கலக்கி, ஸ்டவை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். பொல பொலன்னு வந்ததும்.......
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து உதிர உதிர பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி மேஜைக்கு கொண்டு சேர்க்கவும்.
இதுக்கு தொட்டுக் கொள்ள மாம்பழ ரைத்தா. கட்டித்தயிரில் சீவிய மாம்பழம், சிறிது மிளகாய்பொடி, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்த மாம்பழப் பச்சடி சூப்பரயிருக்கும்.
புல்லா...ஒரு கட்டு கட்டியாச்சா? அப்புரம்?
வெத்தலை போட வேண்டியதுதான். அதிலும் ஒரு சமாச்சாரம் சொல்லவா?
நுங்கை துண்டுகளாக நறுக்குமுன் அதன் மேல் தோலை உரித்து எடுத்திருப்போமில்லையா? அதை தூரப் போட வேண்டாம். அதன் தோல் ஒருவித துவர்ப்பு ருசியுடனிருக்கும்.
அதை வெற்றிலையோடு 'பாக்குக்குப்' பதிலாக வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மடித்து வாயில் அதக்கி மென்றால் பாக்கைவிட கூடுதலாகவே சிவக்கும். (சர்க்கரை வியாதிக்கு அருமையான மருந்தும் கூட).
என்ன..? பாக்கு பொட்டலம் தட்டை விட்டு கீழே இறங்கிடுச்சு?
கோச்சுக்கிச்சாம்!!!!!!!!
கோச்சுக்காதடா செல்லம்.....நுங்கு சீசன் முடிந்தததும் நீதான் கதி!!!!!
நொங்கு பச்சை புலாவ் சமையல் குறிப்பு"மிக அருமையாய் இருந்த்தது.
ReplyDeleteவீட்டுப் பெரியவர்கள் நுங்குத்தோலில் நிறைய மருத்துவ குணம் இருப்பதாக, ரத்தப்போக்கைக்க்கட்டுப்படுத்தும் அரிய குணம் இருப்பதாக சொல்வார்கள்.
அத்றகு பயன் சொனன பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றி.
இராஜராஜேஸ்வரி,
ReplyDeleteமிக்க நன்றி.
பாக்குக்குப் பதில் போட்டால் மிகவும் ருசியாயிருக்கும். நறுக் நறுக்கென்று உள்ளே இறங்கிக் கொண்டேயிருக்கும்.
இதுவரைக்கும் நுங்கை அப்படியே அல்லது, நம்மூர்ப்பக்கம் பட்டைன்னு சொல்லப்படற பனவோலை மடக்குகளில் ஊத்துன பதனீர்கூடவோதான் சாப்பிட்டிருக்கேன். புலாவ் புதுமையா இருக்கு :-)
ReplyDeleteவாழைப்பழம் சேர்த்த நன்னாரி சர்பத்துல நுங்கை சீவிப்போட்டு குடிச்சுப்பாருங்க செமயா இருக்கும் :-))
படங்களும் குறிப்பும் அருமை. நொங்கு சீசன் பெங்களூரில் முடிந்து விட்டதே. அடுத்த சம்மர் வரை காத்திருக்கணும். மாம்பழப் பச்சடியும் புதுசு. செய்து பார்க்கணும். இப்ப சீசனாயிற்றே:)!
ReplyDeleteநுங்குடன் வெற்றிலை விருந்து.
ReplyDeleteI think that is an interesting point, it made me think a bit. Thanks for sparking my thinking cap. Sometimes I get so much in a rut that I just feel like a record.
ReplyDeleteThis is really some awesome advice. Keep it up, my colleagues would love this.
https://49732chompoo.blogspot.com/2019/05/my-first-blog.html?showComment=1626257413054#c8169399801849147191
Edith MalaterreOLANSI FACTORY
Hey this is a good post . Can I use a portion of it on my page? I would of course link to your site so people could view the complete article if they wanted to. Thanks either way.
ReplyDeleteTOP Google Ranking On Your Site
ne site says x is good for you, the other says it wastes your muscles, dont listen to them. Can anyone sort through the marketing hype and deliver actual honest feedback on good supplements to use?
ReplyDeleteH Driving tests cancellations
99-west.blogspot.com
ReplyDelete