Friday, August 15, 2008

ஆகஸ்ட் முதல் PiT...பிட்..பிட்


ஹலோ!!யாராவது வாருங்களேன்!!என்னை பொறிக்கப் போறீங்களா? வறுக்கப்போறீங்களா?
இல்லை அப்படியே சாப்பிடப் போறீங்களா? நான் ரெடி! அப்ப நீங்க?

பத்தோடு பதினொன்றாக முளைத்திருந்தால் தோப்பாகயிருந்திருப்பேன்
தனியே..தன்னந்தனியே முளைத்ததால் நான் ஒரு தனி மரம்!
ஆம்! என் பேரே 'தனி மரம்!'

15 comments:

  1. "தனியே தன்னந்தனியே" நிற்பது மரம் மட்டுமா புறாவும்தான். போட்டிக்குச் செல்லவிருப்பது முதலாவது பிட்டா இரண்டாவது பிட்டா....அதிலும் முதல் படமா இரண்டாவது படமா...எல்லாம் சஸ்பென்ஸ்ல விட்டால் எப்படி? சரின்னு PiT- ல் போய் பார்த்தால் அங்கு இன்னும் பதியவில்லை போலிருக்கிறதே. சீக்கிரம் நடக்கட்டும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. என் கிட்ட கொடுத்தா புறா ரோஸ்ட் பண்னிடுவேன்... :)

    ReplyDelete
  3. தனி மரம் நல்லா இருக்கு... :)

    ReplyDelete
  4. உங்களுக்குன்னு மட்டும் எங்கிருந்துதான் பறவைகள் வந்து போஸ் கொடுக்க உட்காருதோ!!!

    ReplyDelete
  5. இரண்டு படமும் நல்ல வந்துருக்கு என்ன கருவி உபயோகிரிங்க கிட்ட இருந்து எடுத்துருக்க முடியாதுன்னு நினைக்கிறேன் வாழ்த்துகள் .

    ReplyDelete
  6. இந்த முறை வெறும் பார்வைக்கு மட்டும்தான் ராமலஷ்மி!!நேரமின்மை.

    ReplyDelete
  7. என்னவேணா பண்ணிக்கோங்கோ, தமிழ்பிரியன்!!அதுக்குத்தானே அந்த பக்கும்..பக்கும் காத்திருக்குது!!அப்படியே எனக்கும் ஒரு பார்சல்!!!

    ReplyDelete
  8. அதும் பேரே தனிமரம்தான்,தமிழ்பிரியன்!

    ReplyDelete
  9. அந்த மேஜையில் உக்காரப்போனோம். அப்போது அழகாக பறந்து வந்து அந்த மேஜையை அலங்காரம் செய்தது.
    நானும் க்ளிக்கிவிட்டேன். ராஜ நடராஜன்!!

    ReplyDelete
  10. சோனி டிஜிடல், pmt!
    சுமார் 10 அடி தூரத்தில் எடுத்தது.
    நல்லாருக்கா!!அப்பாடி!!

    ReplyDelete
  11. ஐயோ பாவம் அந்தப் புறா
    பாவம் அது தேமேன்னு ,காதலனுக்கோ காதலிக்கோ காத்திருக்கு .அதைப் போய் வறுக்கவா கொறிக்கவா நொறுக்கவான்னு ஆளாளுக்கு அநியாயம் பண்றீங்களே...இதெல்லாம் நல்லாவா இருக்கு?
    அந்த மரம் கூட தனியாத்தான் நிக்குது ,அதையும் வெட்டவா பிளக்கவா வீடு கட்டவான்னு யோசியுங்களேன்.ஓஹோ!ஓசோன் கவலையா?

    ReplyDelete
  12. "பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் பரிசு வெல்லுமே"ன்னு நானானி, ஹம் பண்றது, எனக்குக் கேட்கிறது ...வேறு யாருக்காவது கேட்கிறதா?

    ReplyDelete
  13. புறா வலிய வந்து மாட்டுச்சு. ஆனால் தனிமரம் இருக்குமிடத்துக்குப் போவதே
    சிரமம் அதனால்தான் அதை வெட்டவா...பிளக்கவா என்ற யோசனையே வரலை.ஹி..ஹி..!

    ReplyDelete
  14. 'பார்வை ஒன்றே போதுமே!'ன்னு அத்தோடு நான் நிறுத்திக்கிட்டேனே கோமா? அடுத்த வரியெல்லாம் நான் ஹம்மே செய்யலை. எனக்குத்தெரியும்
    எதுஎது..எங்கெங்கே..எப்படியெப்படின்னு. 'ராவுத்தரே அலையுராராம் குதிரைக்கு ஏது கொள்ளுன்னானாம்!'
    அந்த கதையால்லாயிருக்கு?

    ReplyDelete
  15. அது என்ன கதை ?ராவுத்தர் கொள்ளு குதிரை.....சூப்பரா இருக்கும் போலிருக்கே?
    இதிலே ,?ராவுத்தர் யாரு குதிரை யாரு ?கொள்ளு எது?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...