Wednesday, November 28, 2007

நின்றாலும் நடந்தாலும் சாயத்தான் வேணும்!





விஸ்கான்சின் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுமார் ஐம்பது அடி சுற்றளவுக்கு நாம் வித்தியாசமான ஓர் அனுபவத்தை உணரலாம்.எதேச்சையாக 1948-ஆம் வருடம் இங்கு வந்தவர்கள் கண்டுபிடித்த அற்புதம் இது.
புவி ஈர்ப்பு விசையின் மாறுபாட்டால் நாம் இங்கு நேராக நிற்க முடியாது. அங்கு சென்ற போது அந்த அதிசயத்தை உணர்ந்து வியந்தே போனோம்.


கைடு எங்களுக்கு தெளிவாக எல்லாவற்றையும் விளக்கினார்.அங்கு 90 டிகிரி நேராக நிற்கமுடியாது குறைந்தது 35 டிகிரி சாய்வாகவே நிற்கமுடியும். ஆனால் விழுந்துவிட மாட்டோம்.
ஏணியின் மேல் ஒரு நாற்காலி போட்டு அமரச்சொன்னார். அப்போதும் நாற்காலியோடு சாய்வாகவே இருக்கமுடிந்தது.


குறிப்பிட்ட பாயிண்டை பார்த்துக் கொண்டே கீழிருந்து மேலே போகச்சொன்னார். ஒரு பக்கமாக இழுக்கும் விசையை எதிர்த்து போவது சிரமம்.



இரும்புக் கம்பியில் கோத்த இரும்பு வளையம் கூட சாய்வாகவே தொங்கிய அதிசயத்தை என்னவென்று சொல்வது

விஸ்கான்சின் மாநிலம் முழுதும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டமான இடம்.

11 comments:

  1. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!

    ReplyDelete
  2. சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு பதிவு இதைப்பற்றி யாரோ போட்டிருந்தார்கள் ஆனால் உங்கள் புண்ணியத்தில் படத்தையும் பார்த்தாகிவிட்டது.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி! வடுவூர் குமார்!

    ReplyDelete
  4. It looks more of optical illusion rather than gravitational magic. The objects & persons are standing normally but the background buildings are slanted. This is what is causing the illusion I guess.

    ReplyDelete
  5. பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை அங்கே கொண்டு போனா என்ன ஆகிறது என்று பார்க்க வேண்டும்

    ReplyDelete
  6. may be or maynot be you are right.
    anaany!

    ReplyDelete
  7. கோமா............!
    பைசா செலவில்லாமல் கொண்டு போக முடிந்தால் முயன்றுதான் பாருங்களேன்.
    எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

    ReplyDelete
  8. ம்ம்.. இப்படியெல்லாம் கூட அதிசயங்கள் இருக்கு..

    நல்லாயிருக்கு

    ReplyDelete
  9. யார் பக்கமும் சாயாம நடுநிலமையில் நிக்க முடியாதா?

    என்னப்பா இது அதிசயமா இருக்கு.

    ரொம்ப ரசிச்சேன்.

    ReplyDelete
  10. ஆமாம்!ரூபஸ்!வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

    ReplyDelete
  11. துள்சி! நடுநிலமை என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை! யாருக்காவது ஓட்டுப் போட்டே ஆகவேண்டும்! ஆமாம்!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...