Thursday, November 15, 2007

செல்போனுக்கு ஐஸ் வை!!??



PUT AN 'ICE' CONTACT IN YOUR CELL PHONE IN CASE OF EMERGENCY

ஏவ்வளவு முக்கியமான, அவசியமான அறிவிப்பு இது. ஏதேனும் ஆபத்து அல்லது விபத்து சமயங்களில் பாதிக்கப்பட்டவர் சுயநினைவு இல்லாமலிருந்தால் அருகிலிருப்போர் இந்த ICE CONTACT மூலம் உறவினர்களுக்கு தகவல் அனுப்ப மிகவும் உதவியாயிருக்கும். அதற்குத்தான் செல்போன் வைத்திருப்போர் தங்கள் போனில் ICE..in-case of-emergency என்று யாருக்கு தகவல் அனுப்பணுமோ அவர்கள் எண்களை அதில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

இப்படித்தான் எங்கள் நெருங்கிய உறவினர் பிரயாணத்தின் போது திடீரென மயக்கமாகி விட்டார்.அதற்கு சில வினாடிகள் முன் யாருக்கோ பேசியிருக்கிறார்.உடனிருந்தவர்கள் அவரது செல்போனில் லாஸ்ட் கால் நம்பரைப்பிடித்து தகவல் சொல்லியிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அது அவரது மகனின் எண் தான். உடனேயே அடுத்த ஸ்டேஷனில் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்தான்.
இப்போது நலமாக இருக்கிறார்.

இந்த ஐஸின் அருமை அப்போதுதான் புரிந்தது. எத்தனை பேர் செல்போனில் இந்த ICE CONTACT
உள்ளது? தேவையில்லாத SMS, PHOTOS களைத்தான் ஸ்டோர் பண்ணத்தெரியும். எந்த விஞ்ஞான
கண்டுபிடிப்பிலும் நல்லதும் கெட்டதும் உள்ளது. ஆனால் நம் கண்களில் பளிச்செனத்தெரிவது கெட்டவைகள்தாம். இது போன்ற நல்ல தகவல்களை நாமும் இப்படி கண்ணில் படும்படி விளம்பரம் செய்யலாமே!!

இது நான் சிகாகோ நகர்வலம் வந்தபோது கண்ணில் பட்டதும் க்ளிக்கினேன்.
படத்தின் மேல் க்ளிக்கினால் பெரிதாகத்தெரியும்.

12 comments:

  1. மக்கள்ஸ்!!
    எல்லோரும் அவரவர் செல்போனுக்கு ஐஸ் வெச்சாச்சா?
    ஜல்ப் பிடிச்சிடப்போகுது..பாத்து!!

    ReplyDelete
  2. நல்ல சொல்லுங்க.
    வாகனத்திலே போரப்போ ரோட்லே EYES வைக்கணும் செல் ஃபோன்லே ICE வைக்கணும்

    ReplyDelete
  3. சில பேரைப் பார்த்தீங்கன்னா செல் ஃபோன்லே ஐஸ் வைக்கிறதுக்குப் பதிலா ரோட்லே செல்லும் பொண்ணுங்க மேலே ஐஸ் வச்சுடே போறாங்க.இவங்களையெல்லாம் என்ன பண்றது சொல்லுங்க?

    ReplyDelete
  4. நன்றி! கோமா! சரியாச்சொன்னீங்க. இந்த செல்போனால் வரும் தொல்லைகளும் குளறுபடிகளும் கேவலங்களும் பார்த்தால் மனசு நொந்துபோகுதுங்க. சில பேர் காதுலேயே இது அப்பியிருக்கும்.

    ReplyDelete
  5. கைக்கு அடக்க மாக இருக்க வேண்டியது, கர்ணணின் கவச குண்டலம் போல் இப்போ அனைவரின் காதோடும் கையடக்க தொலை பேசிதான்.

    ReplyDelete
  6. புதுகை தென்றல்!
    இருக்கிற 32 பற்கள் போதாதென்று
    33-வதாக அதுயென்ன..?ஆங்! 'நீலப்பல்' வேறு காதில் சொருகிக் கொள்கிறார்கள்!!

    ReplyDelete
  7. நீங்க சொன்ன மாதிரி என் செல்லுக்கும் ஐஸ் வைக்கப் போனேன் ....என்ன ஐஸ் ?குச்சி ஐசா கப் ஐசா ?அதைச் சொல்லலியே?

    ReplyDelete
  8. எதற்கு வீண் செலவு? ப்ரிட்ஜ்ஜிலிருந்து ஒரு ஐஸ் க்யூப் எடுத்து வைத்தாலே போதும்! மனம் குளிர்ந்து நம்மை ஆபத்து நேரத்தில் காப்பாத்தும்.சேரியா?

    ReplyDelete
  9. ரயிலில் மயங்கியவரின் செல்போன் மூலம் மகனுக்கு தகவல் சென்ற விஷயம் எனக்கும் தெரியும்.
    சகாதேவன்.

    ReplyDelete
  10. அப்டீங்களா? சகாதேவன்!
    எங்கே ரொம்ப நாளா காணோம்?
    அந்த ரயிலில் நீங்களும் இருந்தீர்களா?
    சேரி..உங்கள் செல்போனுக்கு ஐஸ் வைத்துவிட்டீர்களா?

    ReplyDelete
  11. அலை பேசியில் அல்லது கைத்தொலைபேசியில் அல்லது செல்போனில் எப்படுங்க ஐஸ் வைக்கறது - அதெச் சொல்லுங்க

    ReplyDelete
  12. சீனா!
    செல்போனுக்கு மட்டுமே ஐஸ் வைக்கமுடியும். மற்றதுக்கு வைத்தால் ஜல்ப் பிடித்துவிடும்.
    ICE- IN CASE OF EMERGENCY என்று உங்கள் செல்லில் அவசர, ஆபத்து காலங்களில் தொடர்பு கொள்ளவேண்டிய எண்களை பதிவு செய்து கொள்ளுங்கள். சமயத்தில் கை கொடுக்கும். நெல்லையில் காவல்துறை ஜரூராக பேனர்கள் மூலம் அறிவிக்கிறார்களாம். சென்னையில் கண்ணில் படவில்லை.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...