Tuesday, December 7, 2010

என்னோட வீணை பெட்டி.........

”எப்படி இருந்த நா....ன், இப்படி ஆயிட்டேன்!” என்கிறது சந்தோசமாக!!!

பள்ளியில் படிக்கும் போது சின்னக்காவுக்கும் எனக்குமாக ரெண்டு வீணைகள் வாங்கித் தந்தார் அப்பா. உடனே அவற்றை பத்திரமாக வைக்க ஏதுவாக பெட்டி செய்ய வேண்டுமென்று, பள்ளியில் நான்கு வீணைகள் வைப்பதற்கு ஒரு பெரிய ஷெல்ஃப் செய்து அதில் வைத்திருந்தார்கள்.

அதே போல் வேண்டுமென்று ரெண்டு வீணைகள் வைக்க ரெண்டு தட்டுகள் கொண்ட ஷெல்ஃப் கம்பெனி ஆசாரியிடம் சொல்லி செய்து கொடுத்தார்கள்.

அப்பாவுக்கு மரச்சாமான்கள் எதுமே சாதாரண மரத்தில் செய்யப் பிடிக்காது. எல்லாம் ரோஸ்வுட்டிலேயே இருக்கும். எங்க வீடுகளில் பர்னிச்சர்கள், சோபா, கட்டில், ட்ரஸ்ஸிங் டேபிள், ஸ்டூல் இப்படி எல்லாமே ரோஸ்வுட்டில்தானிருக்கும்.

பின்ன...? வீணைப் பெட்டி மட்டும் எப்படியிருக்குமாம்? ரோஸ்வுட்டில்தான்.

கல்யாணம் ஆகி வேறு வீடு புகுந்த போது அப்பாவிடம்,” ஊர் ஊராக மாறும் வேலை அவருடையது. எல்லா இடங்களுக்கும் தூக்கிச் செல்ல முடியாது. எனவே எங்கு ஒரே இடத்தில் செட்டில் ஆகிறேனோ அப்போது பெட்டியை எடுத்துக்கொள்கிறேன்.” என்று சொல்லிவிட்டு ஆசைக்கு ஒரு வீணையை மட்டும் என்னோடு எடுத்துக்கொண்டேன்.

அதுவும் என்னோடு பல ஊர்களைக் கண்டது.

வீணைப்பெட்டியை நான் விட்டுவிட்டு வந்தது அறுபத்து எட்டில்(1968). பின் அது என்னோடு, மற்ற ரெண்டு வீணைகளோடு இணைந்து கொண்டது தொண்ணூற்றியாறில்(1996).

சின்னக்காவுக்கு அவள் வீணை தேவையில்லையென்றாலும், அது அவளுடையதாயிற்றே! என்று ஞாயப்படி அவளிடம் சேர்த்துவிட்டு மற்ற இரண்டையும் வைத்துக்கொண்டேன்.

வந்ததிலிருந்து அந்த ரூம், இந்த ரூம் என்று அதன் மேல் புறம் பல வகைகளில் உபயோகமாயிற்று. ஹாலில் அலங்காரப் பொருட்கள், பூஜாடி, போன்றவை முதலில் ஒழுங்காக இருக்கும் பிறகு மெள்ள மெள்ள வாட்ச், பேனா, பர்ஸ், கைப்பை, செல்போன்கள் என்று குடியேறலாயிற்று, பின் பெட்ரூமில் துவைத்த துணிகள் அடுக்கி வைக்க என்று ஆரம்பித்து மறுபடியும் சப்பு சவறுகள், அதததுக்கு தனி இடங்கள் இருந்தாலும், சேரலாயிற்று.

சரிப்படாது என்று மறுபடியும் ஹாலில் டிவி, செட்டாப் பாக்ஸ், டிவிடி ப்ளேயர், ஒரு போட்டோ ஃப்ரேம், சில கிரிஸ்டல்ஸ் என்று அளவாக வேறு எதுவும் குடியேற முடியாத படி கணக்காக அலங்கரித்து வைத்தேன்.

ஆனாலும் பட்டா இல்லாத இடத்தில் வம்படியாக குடிசை போடுவது போல் இங்கும் பேனாக்கள், வாட்சுகள் என்று கண்ணுக்குத் தெரியாத இடங்களில் ஆக்ரமிப்புகள் ஆரம்பித்தது.
அது கண்டு ஆக்ரோஷமாக பிரமித்து, இனி தாங்காதுடா சாமின்னு இதுக்கு ஒரு வழி பண்ணணும் என்று முடிவெடுத்தேன்.

அதுதான் வீணைப் பெட்டியின் மேல் புறத்தில் அதே அளவு ஒரு ஷெல்ப் செய்து க்ராக்கரிகளும் ஷோக்கேஸ் சமாச்சாரங்களும் வைப்பது என்று முடிவு செய்து கார்பெண்டரை வரவழைத்து செய்துதான் நீங்கள் பார்க்கும் வீணை-கம்-க்ராக்கரி-கம்-அலங்காரப் பொருட்களுக்கான ஷெல்ப்!!!

என்ன....ஒன்றை மறந்துவிட்டேன். பதிவெழுத உபயோகப்படும் என்று அன்று தோன்ற வில்லை. தோன்றிய போது வேலை முடிந்து விட்டது. இல்லயென்றால் ஃப்ளாட்டுக்கு வெளியே போட்டிகோவில்தான் வேலை நடந்தது. படிப்படியாக படமெடுத்திருப்பேனே....!!!!! விட்டுட்டேனே....விட்டுட்டேனே...!!!!


கீழே தெரியும் படத்தில், ரெண்டு வீணைகள் மட்டும் கொண்ட கீழ் பகுதிதான் என்னோட வீணைப் பெட்டி.



இப்போ ரோஸ்வுட் எல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா? ரப்பர்வுட்டில் செய்து அதற்கு ரோஸ்வுட் கலரில் வார்னிஷ் கொடுத்து கிட்டத்தட்ட கொண்டுவந்து விட்டோம்.

என்ன இருந்தாலும் அது அதுதான், இது இதுதான்!!!

உள்ளே க்ளாஸ் தட்டுகள் , கதவுகள் பொருத்தி கம்பீரமாக நிற்கிறது. ஆரம்பத்திலேயே ஆக்ரமிப்பா? மேலே எதுவோ இருக்கிறதே!! அகற்றிவிட்டேனே உடனேயே!!!

அதன் வலப்பக்க ஷெல்பில் ஒரு அடி, முக்கால் அடி, கால் அடி அளவுக்கு பொருத்திய தட்டுகள். இடப்பக்கத்தில் எல்லாம் ஒரு அடி தட்டுகள்.


என்னிடமுள்ள க்ராக்கரிகளை அடக்கிய பிறகு.


மற்றொரு கோணத்தில்.



வலப்புற ஷெல்ப்.



இடப்புறம்.


மேலும் லாஃப்டில் உள்ள மிச்சம் மிஞ்சாடிகள் மற்றும் ஆங்காங்கிருந்து(HONGKONK அல்ல)திரட்டிய கலைப் பொருட்கள் எல்லாம் அடங்(க்)கியதும். இனி புதுசு வாங்கினால்தான்! இந்த நினைப்பு கேட்டிருக்குமே என்னவோ?

பெட்டிகளில் உறங்க வைக்கப் பட்டிருக்கும் கொலுவுக்கான அலங்காரப் பொருட்கள்......அடுத்த வருடம் வரை நாங்க தூங்கணுமா? எங்களையும் அங்கே அடுக்கி பார்வையாக வையேன் என்று என்னை செல்லமாக வைதன.

ஓகே! அவற்றையும் சேர்த்து அடுக்கியதுதான் பின் வரும் படங்கள்.






கண்ணாடி லக்கிப் பிளாண்ட்! அதன் மேல் இனி காணக் கிடைக்காத கத்தும் குருவி!! இதன் பேர் ராபின்.

ஹூம்....!இங்கும் கொஞ்சம் கொஞ்சமாக சப்பு சவறுகள் சேருதோ? இதுக்கு மேல் விடமாட்டேனே!!!!!!!

16 comments:

  1. தயவு செய்து யாரெனும் வந்து ஆக்ரமிப்பு செய்யாதீர்களேன்...ப்ளீஸ்!!!

    ReplyDelete
  2. கலக்கல்ங்க நானானி.. அதும் மேல இருந்த சாமானை போட்டோ எடுத்த உடனேயே அகற்றினேன்னு போட்டிருக்கீங்களே..:))

    ReplyDelete
  3. வீணையிலிருந்து நாதம் மட்டும்தான் வரும் என்று நினைத்தேன்.
    ஒரு கட்டுரையை அழகாக மீட்டி விட்டீர்கள்.

    ReplyDelete
  4. முத்துலெட்சுமி,

    இல்லைனா..? சொந்த செலவுல என்னமோ வச்சா மாரி ஆயிடுமே!!அதா!

    அதும்போக அதுக்காக வரும் பின்னோட்டங்களை செனச்சுப் பாத்தா!!!

    ReplyDelete
  5. கோமா,

    மீட்டல் சுதி சுத்தாமாயிருந்ததா? நன்றி!!

    ReplyDelete
  6. சப்பு சவ்றுகள் சேராது பார்த்துக் கொள்வதே பெரிய கலை.

    வீணை அலமாரி அழகு.

    ReplyDelete
  7. நன்றி, கோமதி அரசு,

    இந்த சப்பு சவறுகளை வேண்டாமென்று தூக்கிப் போடவும் முடியாது, எப்பவாவது தேவைப் படுமென்று வச்சுக் கொள்ளவும் முடியாது. என்ன செய்ய?

    ReplyDelete
  8. ஆஹா..... சூப்பரா இருக்கு.

    அதுசரி வீணை ரெண்டா???? அம்மாடியோவ்!

    வரேன் நேரில், புது அடிஷனைப் பார்க்கவும் ரெட்டைவீணை இசை கேட்கவும்.

    ReplyDelete
  9. ராமலக்ஷ்மி,

    சேரீ...!

    ReplyDelete
  10. துள்சி,

    //வரேன் நேரில், புது அடிஷனைப் பார்க்கவும் ரெட்டைவீணை இசை கேட்கவும்.//
    வாங்க...வாங்க...!

    எதிரெதிர் வீணை....போட்டி வச்சுக்கலாமா? துளசியையும் நாதத்தால் வென்றிடுவேன்!!!!

    ஐயோ!! எனக்கு வாசிக்கத் தெரியாதே!

    அதனால்தான் தைரியமாக போட்டிக்கு அழைத்தேன்!!!!

    இப்போ வீணைப் பெட்டி மேல் என்ன இருக்கு தெரியுமா? நீங்கள் அன்போடு அளித்த லக்கி ப்ளாண்ட்தான்!!

    ReplyDelete
  11. நல்ல ஐடியா செஞ்சிருக்கீங்க நானானி.

    படங்கள அருமை.

    ReplyDelete
  12. வீணைப் பெட்டிக்குக் கண்ணாடிக் கதவு வச்சுருக்கலாம்.

    இவ்வளவு அழகான சமாச்சாரத்தை 'ஒளிச்சு வைக்கலாமோ....தோழி......'

    (என்ன ராகமுன்னு கண்டு பிடிச்சுக்குங்க)

    ReplyDelete
  13. With all the Glass inside and out, looks fabulous !!!
    Velai ellam mudinthathum paarka ninaithen.
    - S.

    ReplyDelete
  14. Welcome, Pudukaithental,

    After a long time seeing you.

    Thank You!

    ReplyDelete
  15. Tulsi,

    //வீணைப் பெட்டிக்குக் கண்ணாடிக் கதவு வச்சுருக்கலாம்.//

    Your idea is good. I too think of this idea. Since it's more than forty years old, I want to keep it as an antic-piece also in rememberance of my Father. So I did'nt touch it. Now is it now ok for you?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...